கண் எரிச்சல் குணமாக
கண் எரிச்சல் குணமாக அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி,மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சுடுநீரில் சாப்பிட்டு வர வேண்டும்.
ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட
ஆரோக்கியமான பிரசவத்திற்கு ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
தொடர் இரும்பல் நிற்க
சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் தொடர் இரும்பல் சரியாகும்.
பாதப்படை குறைய
பாதப்படை குறைய வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தமாக கழுவி விட்டு பிறகு இந்த வினிகர் நீரில் வைத்து எடுத்து நன்றாக காய வைத்து வந்தால் பாதப்படை குறையும்.
ஞாபக சக்தி அதிகரிக்க
ஞாபக சக்தி அதிகரிக்க வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தாய்ப்பால் சரிவர அருந்தாத குழந்தை
தாய்ப்பால் சரிவர அருந்தாத குழந்தைகளுக்கு துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் கொண்டு சந்தனம்போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் குழந்தைகள் பால் அருந்தும்.
தாய்ப்பால் கட்டு குறைய
தாய்ப்பால் கட்டு குறைய பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றுப் போட்டால் பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும்..
பல் நோய்கள் குறைய
பல் நோய்கள் குறைய ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.
பல்லில் இரத்தம் வருதல் குறைய
பல்லில் இரத்தம் வருதல் குறைய பச்சை நன்னாரி வேரைக் வெந்நீர் விட்டு அரைத்து கொடுக்க பல்லில் இரத்தம் வருதல் குறையும்.
பிள்ளைப்பேறு உண்டாக
பிள்ளைப்பேறு உண்டாக மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி 3 கிராம் காலை,மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும்.
மலப்புழுக்கள் வெளியேற
பிரமத்தண்டு வேர் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வருவதால் மலப்புழுக்கள் வெளியேறும்.
வயிற்றுக் கடுப்பு குறைய
வயிற்றுக் கடுப்பு குறைய வெட்டிவேரை பொடிசெய்து அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து வெந்நீரில் அருந்த வயிற்றுக் கடுப்பு குறையும்.
தொண்டைப்புண் குறைய
தொண்டைப்புண் குறைய சமையல் சோடா, உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் ஆகியவை குறையும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா தீர சிறுகுறிஞ்சா வேர் பொடி ,திரிகடுகு பொடி வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா குணமாக
ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடு நீர் பருகி வர வேண்டும்.
உடலில் சூடு குறைய
நெல்லிவற்றலை இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர உடலில் சூடு குறையும்.
கண் கோளாறுகள் குறைய
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
சிறுநீரக கல் குறைய
கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி, தேனை சேர்த்து அதனுடன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.