தமிழ் இனம்

💐 தமிழ் இனம் 💐

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரக்காத்துஹு

தமிழர்களாகிய நாம் நம்முடைய மொழி , இனம் கலாச்சாரம், பண்பாடு , வமசம்  ஆகியவற்றிக்காக அவற்றை பாதுகாப்பதற்காக நம்முடையை செல்வங்களை செலவு செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையா? மேலும் மேற்கண்டவற்றிக்காக நாம் நம்முடைய நேரத்தை செலவிடுவது சரியா ? இவ்வாறான செயல்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று  தருமா? மேலும் அரபி மொழி தானே அழகிய இலக்கிய மொழியாகவும் நமது கப்ருடைய வாழ்வுக்கும் மஹ்சருக்கும் சுவனத்திற்கும் ஏற்ற மொழியாகவும் அல்லாஹ்வால் அங்கீகரிக்க பட்ட மொழியாகவும் இருக்கிறது எனவே அவற்றை கற்பது தானே ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக இருக்கிறது அப்படி இருக்க தமிழ் மொழிக்காக நாம் செலவழிப்பதும் அவற்றிக்காக போராடுவதும் கூடுமா? இக்கேள்விகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்

பொதுவாக அல்லாஹ் மனிதர்களை பல கோத்திரங்களாக படைத்திருக்கிறான் உடலமைப்பில் மனிதர்களை பல நிறமுடையவர்களாக உதாரணமாக வெள்ளையாகவும் கறுப்பாகவும் சிகப்பாகவும் மாநிறமாகவும் படைத்திருக்கிறான் மேலும் மனிதர்களை நெட்டையாகவும் குட்டையாகவும் நடுத்தரமாகவும் படைத்திருக்கிறான் மேலும் பல மனிதர்களை முக அமைப்பில் பல தோற்றங்களில் படைத்திருக்கிறான்

இவ்வாறாக பல வகையினராக மனிதர்களை அல்லாஹ் ஏன் படைக்க வேண்டும் இதற்கான விடையை நீங்கள் அறிந்தால் மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை நாம் அறிந்து கொள்ள முடியும்

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் ஓரே மாதிரியாக படைத்திருந்தால் இந்த உலகத்தில் பல குழப்பங்கள் நிறைந்திருக்கும்.

இந்த உலகத்தில் அவரவர்கள் தங்கள் குடும்பத்தை அடையாளம் கண்டுக்கொள்வதில் குழப்பம் நிகழ்ந்திருக்கும் அவரவர்கள் வசிக்கும் பூமியின் எல்லைகளில் குழப்பம் நிகழ்ந்திருக்கும் அவரவர்கள் பேசும் மொழிகளில் பேச்சில் அவர்களின் மொழி ஓரே மாதிரியாக இருப்பதால் அதிலும் குழப்பம் நிகழ்ந்திருக்கும்

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அல்லாஹ் மனிதர்களை பல உடலமைப்பு கொண்டவர்களாகவும் பல இனத்தவர்களாகவும் பல கோத்திரங்களாகவும் பல மொழி பேசுபவர்களாகவும் அல்லாஹ் படைத்திருக்கிறான் இதை பற்றி அல்லாஹ் உங்களுக்கிடையே நீங்கள் அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு நாம் மனிதனை படைத்தோம் என்று கூறுகிறான்

ஆக எப்பொழுது ஒருவர் பேசும் மொழி ( Language ) அவரது இனம் ( Race ) அவரது கோத்திரம் ( Tribes or Family ) அவரது கலாச்சாரம் ( Culture ) ஆகியவைகள் தனி அடையாளத்துடன் இருக்கிறதோ அப்பொழுதே அவர் தன்னுடைய மொழியை , இனத்தை , கோத்திரத்தை , கலாசாரத்தை பாதிகாக்கவும் அவற்றிக்காக செலவழிப்பதும் அவற்றிக்காக போராடுவதும் கடமையாகும் இருந்தாலும் ஒரு சமூகத்திற்காக அதாவது இனம் , மொழி , கோத்திரம் , கலாச்சாரம் சார்ந்த சமுத்திற்காக அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது பர்ழு கிஃபாயா இருக்கிறது அதாவது அச்சமூகத்தை சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினராவது மேற்கண்டவற்றிற்காக போராடுவது கடமையாக இருக்கிறது யாருமே அவற்றை பாதுகாப்பதற்கு முன் வரவில்லையானால் அச்சமூகம் அழிந்து போக அவர்களே காரணமாக இருப்பார்கள்

இப்பொழுது நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தற்கு வருவோம்

இந்த உலகத்தில் இஸ்லாம் மார்க்கம் வாழ்க்கை நடைமுறைக்கு உகந்த மார்க்கமாக இருக்கிறது இறைவனை அறிவதற்கு அவனை வணங்குவதற்கு ஏற்ற மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கமாகும் இஸ்லாம் மார்க்கம் இவ்வுலகில் மனிதனை மேம்படுத்தும் மறுமையில் மனிதனுக்கு ஈடேற்றத்தை கொடுக்கும் மேலும். இஸ்லாம் மார்க்கம் மனிதனின் அதாவது அவனது உடலமைப்புக்கு ஏற்ற மார்க்கம் ஆகும் மனிதன் தன்னுடைய உடலமைப்புக்கும் தனது மனதுக்கும் ஒத்துபோகிற அமைப்பில் இருக்கிற அறிவியல் அம்சங்களுடனும் இயற்கை அம்சங்களுடனும் ஆன்மீக அம்சங்களுடனும் மனிதனை வழி நடத்தகூடியது தான் இஸ்லாம் மார்க்கம் ஆகும்

தமிழர்களாகிய நம்முடைய கலாச்சாரம் என்பது நாம் பேசும் மொழி, நாம் செய்யும் தொழில், நாம் வசிக்கும் பூமியின் சீதோஷ்ணம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கலாச்சார கட்டமைப்பை கொண்டதாகும் மேலும் நம்முடைய தமிழ் கலாச்சாரம் பூமியின் நிலப்பரப்பை எல்லைகளாக கொண்ட ஓர் இனத்தின் கலாச்சாரம் ஆகும்

மேற்கண்டவற்றிக்கும் நாம் பின்பற்றும் வாழ்கை நெறியாக ஏற்று கொண்டிருக்கும். இஸ்லாத்தை பின்பற்றுவதையும் சேர்த்து குழப்பி கொள்ளக்கூடாது
அவ்வாறு நாம. குழப்பி கொண்டால் அது அவரவர்களுடைய தவறே தவிர இஸ்லாம் அதற்கு பொறுப்பாக முடியாது

இன்று நாம் தமிழர்களுக்குள்ளேயே முஸ்லிம்களாகிய நாம்  தனிமைப்பட்டு இருப்பதற்கு காரணமே இவ்வாறு நாம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக்கொண்டு நம்மை நாமே பிரித்து வைத்திருப்பதால் தான் சுலபமாக அந்நியர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகிறார்கள்

தொடரும்

ஆக்கம் :
அ.ஷே.முஹம்மது ஆரிஃப்
கூத்தாநல்லூர்
பதிவு நாள் : 31-08-2018
9976063985