சும்மா AC யில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானிட ஜென்மங்களே
சும்மா AC யில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானிட ஜென்மங்களே நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 ரூபாய் (சுமார்) கொடுக்கிறோமே, மாட்டு இரத்தம் மற்றும் விவசாயின் ரத்தமும் சேர்ந்து பாலாய் கறந்து இந்த மானிட ஜென்மங்களுக்கு கொடுக்கிறானே அந்த விவசாயிக்கு நாம் 1 லிட்டர் பாலுக்கு 100 ரூபாய் தரவில்லை,வெறும்23 ரூபாய் தான் இதுவரை விவசாயிக்கு கொடுத்துள்ளோம் வெறும்நான்கு ரூபாய் தான் உயர்த்தி கொடுக்கிறோம், இந்த உயர்வு கிடைப்பதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் , ஆர்பாட்டங்கள், கண்டணங்கள், வெறுமனே விவசாயத்தை காப்போம் , விவசாயியை காப்போம் என்று கூறி என்ன பலன்? துளி அளவாவது வார்த்தைகளில் உண்மை வேண்டும் ,ஏன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு , பஸ் கட்டணம் உயர்வு, அப்போதெல்லாம் எங்கு சென்றார்கள் இந்த சமூக நலவாதிகள் , ஒரு பாவமும் அறியாத, பிறந்த நொடி முதல் துன்பமும், கஷ்ட நஷ்டங்களை மட்டுமே அனுபவத்த இந்த விவசாயிக்கு வெறும் 4 ரூபாய் கிடைப்பதில் ஏன் இவர்களுக்கெல்லாம்இவ்வளவு பொறாமை? இதை வைத்து அரசியல் செய்கிறார்களா ! தயவு செய்து சமூக நல வாதிகளே இந்த விவசாயிகளை மதிப்பதாக பொய் வேசம் போட்டு மிதிக்க வேண்டாம். போதும் உங்கள் பொய் வேசங்களும், உங்கள் கோசங்களும். இனியும் எவ்வளவு துன்பம் , கஷ்டம், நஷ்டம் வந்தாலும் தாங்கும் வலிமையான இதயத்துடன் தான் அந்த இறைவன் விவசாயியாக படைத்துள்ளான். தயவு செய்து விவசாயியையும் விவசாயத்தையும் நீங்கள் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காதீர்கள் அன்பார் ந்த விவசாய நண்பர்களே நீங்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் ஒவ்வரும் 100 பேருக்கு பகிருங்கள் அப்பொழுதாவது இந்த விவசாயிகளின் குமுறல்கள் ஒலிக்கட்டும் , இந்த விவசாயிகளின் கஷ்டம், நஷ்டம், துன்பம் தெரியட்டும், இந்த விவசாயத்தின் அருமை புரியட்டும்
Subscribe to:
Posts (Atom)