COCO Cola

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற குளிர் பானங்களுள் ஒன்றாக இருக்கிறது கொக்கோ - கோலா .

கொக்கோ - கோலா பானம் குடிப்பதற்காக மட்டுமே என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அது குடிப்பதற்கு மட்டும் இல்லாமல் வீட்டின் இன்னும் சில விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம்

அதைப் பற்றிய பதிவு தான் இது

) கொக்கோ கோலாவில் பேக்கிங் சோடாவில் உள்ள சோடியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் பேக்கிங் சோடாவில் உள்ள அத்தனை நன்மைகளும் இதிலும் உங்களுக்குக் கிடைக்கும்.

) பூக்கள் வாடிப் போய் இருந்தால், அந்த பூக்களின் மேல் சிறிது கோக்கை தெளித்து வையுங்கள். பூக்கள் புத்துணர்ச்சியோடு புதிதாக பூத்ததுபோலவே இருக்கும். வாசனையும் அதிகரிக்கும்.

) கார்ப்பெட் மற்றும் டேபிள் விரிப்புகளில் அடிக்கடி எழுதும் மார்க்கர் பேனாக்களால் உண்டாகும் கறைகள் நீங்க கொக்கோ - கோலாவை சிறிதளவு ஊற்றி சிறிது நேரம் கறை படிந்த இடத்தில் நன்கு அழுத்தித் தேய்த்து பின்பு சோப்பு தண்ணீரில் அலசி எடுத்தால் போதும். மார்க்கர் கறை போயே போகும்.

) கொக்கோ - கோலாவால் ஸ்விம்மிங் பூலின் அழுக்கையும் உங்களால் சுத்தம் செய்ய முடியும். ஆம். சுத்தம் செய்ய நினைக்கின்ற பொழுது, இரண்டு பாட்டில் கோக்கை நீச்சல் தொட்டிக்குள் ஊற்றி சிறிது நேரம் ஊறவிட்டு நன்குத் தேய்த்தால் போதும். நீச்சல்குளம் பளிச்சிட ஆரம்பித்துவிடும்

) குளிர்காலத்துக்கு ஏற்ற கதகதப்பைக் கொடுக்கும் பானம் தான் இந்த கொக்கோ - கோலா. குளிர் காலத்தில் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது, கொஞ்சம் கோக் எடுத்துக் குடித்துப் பாருங்கள். சுகமாக உணர்வீர்கள்.

) சில்லறைக் காசுகளில் உள்ள கறைகளை நீக்க ஒரு பாட்டிலில் சிறிது கோக்கோ ஊற்றி, அதில் காசுகளைப் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவிப் பாருங்கள். கறைபடிந்த சில்லறை காசுகள் புதிதுபோல் பளபளக்கும்.

)சில சமயங்களில் நாம் போல்ட்டை கழட்ட வேண்டும் என்று நினைக்கிற பொழுது, என்னதான் செய்தாலும் அதில் துருப்பிடித்து, கழட்ட முடியாமல் சிரமப்படுவோம். ஆனால் சிறிது சிறிதாக கோக்கை அந்த போல்ட்டில் ஊற்றி, ஊறவிட்டு கழட்டினால் மிக வேகமாகக் கழட்டிவிட முடியும்.

) தலைக்கு ஹேர்டை போட்டு அது கொஞ்சம் அதிகமாகிவிட்டால், எரிச்சல் அதிகமாகிவிடும். அப்படி நீங்கள் போடுகின்ற ஹேர்டை மிகவும் அதிகமாகிவிட்டால் அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த கோக் இருக்கும். கோக்கை தலையில் சிறிது நேரம் சிறிதளவு தண்ணீரில் கலந்து தலையை அலசுங்கள். மிக அடர்த்தியாக உள்ள கலர் குறைந்து, சரியான நிறத்துக்கு வந்துவிடும்.

) காபி மற்றும் டீ போடும் பாத்திரங்களில் உண்டாகிற கறைகள் போவதற்கு பாத்திரத்தில் கோக்கை சிறிது மட்டும் தண்ணீர் கலந்து இரவு முழுக்க ஊறவிடுங்கள். பிறகு காலையில் எழுத்து வழக்கம் போல சோப் போட்டு தேய்த்துப் பாருங்கள். அந்த பாத்திரத்தில் டீ கறை சிறிது கூட இருக்காது.

) டாய்லெட் டாய்லெட்டை கிளீன் செய்வதற்கு பல்வேறு வகையான கிளீனர்களை விட கோக் அதிக சுத்தத்தை உங்களுடைய டாய்லெட்டுக்குக் கொடுக்கும். ஒரு பௌல் அளவுக்கு கோக்கை டாய்லெட்டில் ஊற்றி சிறது நேரம் ஊறவிடுங்கள். பேக்கிங் சோடாவில் உள்ள அமிலத்தினால் டாய்லெட் பளிச்சென்று மாறிவிடும்...