வரலாற்றில் பெண்ணுரிமை,

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த தீர்ப்பு மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப் போகிறாராம் நடிகை💃 ரஞ்சனி.

வரலாற்றில் பெண்ணுரிமை,
பெண் விடுதலை குறித்த போராட்டங்களை புரட்டினால் காலந்தோறும் ஏதேனும் ஒரு ரஞ்சனி பெண்களுக்கு எதிராக களமிறங்கியிருப்பார்.

1930 ல் தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி,
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் தீவிரமாகப் போராடிய போது தேவதாசி
முறை பாதுகாக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து தேவதாசிப் பெண்களைத் திரட்டி போராடியவர் பெங்களூர் நாகரத்தினம்மா எனும்
தேவதாசி.

பெண்களுக்குச் சொத்துரிமை தரும் சட்டத்தினை அன்றைய பிரதமர் நேரு முடிவெடுத்த போது
இங்கே சங்கராச்சாரியாரின் தூண்டுதலின் பேரில் எங்களுக்கு சொத்து வேண்டாம்
என்று
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் கூட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல்
மனு ஒன்றைத் தயாரித்து கையெழுத்திட்டு நேருவுக்கு அனுப்பினர்.
டெல்லியில் கமலாதேவி சட்டோபாத்யாய என்பவர்
எங்களுக்கு சொத்து வேண்டாம் என்று பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இத்தனைக்கும் பெண்களுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ கூடாது, ஆண்களுக்கு அடிமையாக இருப்பதே பெண்களுக்கு அழகு என்று கூறிய சங்கராச்சாரியின் பேச்சை கேட்டு கொஞ்சம் கூட சுரணையில்லாமல் செயல்பட்டனர்
அந்த பெண்கள் கூட்டத்தினர்.

ராஜாராம் மோகன்ராயின்
கடும் முயற்சிக்குப் பின் 1829 ல் சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு முடிவு கட்டினார் பெண்டிங் பிரபு.
இது நிகழ்ந்து
150 ஆண்டுகள் கடந்த நிலையில் 1987ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி ராஜஸ்தானில் தியோலாரா கிராமத்தில் ரூப் கன்வர் எனும் பெண் கணவனின் உடலுடன் சேர்த்து எரிக்கப்பட்டாள்🔥.

இந்த கொடூரத்தால் நாடே கொந்தளிக்கிறது,
சதி எனும் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றம் சட்டமியற்ற முடிவு செய்த நிலையில் அன்றைய
பாரதீய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவர் விஜயராஜே சிந்தியா பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்துகிறார்.
அந்த பேரணியில் பேசிய அவர் உமிழ்ந்த
நச்சுக் கருத்துக்கள் இவை...

உடன்கட்டை ஏறுதல் இந்து மதத்தின், இந்து மரபின் பெருமை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தம் கணவருடன் உடன்கட்டை ஏற உரிமையுண்டு.

ஆனால் மேற்படி நச்சினை உமிழ்ந்த அம்மையார் தம் கணவர் இறந்த போது உடன்கட்டை ஏறாமல்
பல காலம் உயிர் வாழ்ந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரஞ்சனி, பெங்களூர் நாகரத்தினம்மா, சங்கராச்சாரியின் பேச்சைக் கேட்டு செயல்பட்ட பெண்கள் எல்லாம் சுயபுத்தி இல்லாதவர்கள், அவர்கள் தெளிவும் புரிவும் அவ்வளவுதான் என்று
கடந்து விடலாம்.

சதியை ஆதரித்துப் பேரணி நடத்திய விஜயராஜேசிந்தியாவின் செயல் முற்றிலும்
அரசியல்
சுயநலம் என்று கடந்து விடலாம்.

ஆனால் நீதித்துறைக்கு
உச்ச அமைப்பாகத் திகழும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறியிருக்கும் கருத்து தான் அச்சத்தை தருகிறது. மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் காவிகள்🚩 வலுவாகக் காலூன்றி இந்துத்துவ தலிபான்களாக மாற முயற்சிக்கும் வேளையில்
இந்து மல்ஹோத்ரா போன்று பிற்போக்குச் சிந்தை கொண்டவர்கள்
நீதி சொல்லும் இடத்தில் இருந்தால் காலங்காலமாக கட்டிக்காத்து வந்த ஜனநாயகம்
குழி தோண்டி புதைக்கப்படும்.

எது எப்படியோ, மகரஜோதி என்பது இயற்கையாகத் தோன்றுவதில்லை மனிதர்களால் உருவாக்கப்படுவது என என்று அரசாங்கம் கோர்ட்டில் தெரிவித்ததோ அன்றே இந்த சாஸ்திர, சம்பிரதாயம் எல்லாம் அடிபட்டு போய் விட்டது.
உடனடியாக பெண்களை அனுமதிக்கும் பணியை முடுக்கி விட வேண்டும்.

By Yuvan Swang