சாதிய இழிவு நீங்க வேண்டும் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தை தவிர வேறு வழி இல்லை....
---தொல் திருமாவளவன் !
நான் எனது முனைவர் ஆய்வின் படி 1980 களில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பள்ளர் இன மக்களை சந்தித்து இந்த உண்மையை தெளிவாக தெரிந்து கொண்டேன். குறிப்பாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்னர் கூட அவர்கள் பள்ளர் , பறையர் , சக்கிலியர் கிறிஸ்துவர்களாகவே வாழ்ந்து வருவதைக் நாம் காண முடிகிறது. அவர்களின் சாதிய ஒடுக்கு முறை குறைந்ததாக ஒரு போதும் இல்லை. 1960 ல் ராசையா என்பவர் கிறிஸ்துவராக மதம் மாறிய பின்னர் கூட சமூக அந்தஸ்து கிடைக்காமல் தற்போது இப்ராஹிம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறியதை அறிந்து கொண்டேன்.தற்போது அந்த மக்களின் தாழ்த்தப்பட்ட அடையாளம் முழுவதும் நீங்கி நிலையில் வாங்க பாய் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் என்ற அடிப்படையில் அழைக்கப்படுகிற காட்சியை நம்மால் அவதானிக்க முடிகின்றது. தற்போது நிலையில் அவர்களின் பேரக் குழந்தைகள் அணைவரும் பிறப்பிலேயே முஸ்லிம்களாகவே பிறந்து விடுவதால் அவர்களுக்கு எந்த சாதிய ரீதியான அடக்கு முறைகளும் தெரியாமல் முஸ்லிம்களாகி விட்டனர்.
இதை நான் மீனாட்சி புரத்தில் கண்கூடாக காண முடிந்தது. இதை விட அந்த மக்களுக்கு வேறென்ன அதிகாரமும் , அந்தஸ்தும் தேவை என்று சொல்லுங்கள்.
------- ( தொல் திருமாவளவன் , தலைவர் விடுதலை சிறுத்தைகள் )