பித்தவெடிப்பு நீங்க
வேப்பெண்ணை,மஞ்சள் இவைகளை கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர பித்தவெடிப்பு நீங்கும்.
புண்கள் ஆற
புண்கள் ஆற சீந்தில் இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி புண் மீது கட்டி வர புண் ஆறும்.
மூக்கில் உள்ள புண் ஆற
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணையை கலந்து மைய அரைத்து புண்ணின் மீது தடவி வர மூக்கில் உள்ள புண் ஆறும்.
இளைப்பு குறைய
இளைப்பு குறைய சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை நெருப்பு அனலில் காட்டி இளஞ்சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வந்தால் கபத்தினால் ஏற்படும் இளைப்பு குறையும்.
கபம் குறைய
குப்பைமேனி இலையை உலர்த்தி தூள் செய்து வேப்பெண்ணெயில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.
தலைவலி குறைய
கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு தலைவலி, கழுத்து வலி ஏற்படும் போது இந்த எண்ணெய்யை தடவி வந்தால் வலி குறையும்.
பித்த வெடிப்பு குறைய
மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.
மூல நோய் குறைய
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல நோய் குறையும்
சன்னி பிடரி இசவு போன்ற வாத நோய்களில் இருந்து விடுபட
வேப்பெண்ணையை தலைக்கு தேய்த்து ஊறவைத்து பின் தலைமுழுகி வர சன்னி பிடரி இசவு வாத நோய்களில் இருந்து விடுபடலாம்.
பூச்சி மற்றும் பல்பட்ட விஷம் குறைய
விஷம் குறைய குப்பைமேனிச் சாறு, வேலிப்பருத்திச்சாறு, அவுரி இலைச்சாறு, ஊமத்தைச் சாறு, தைவேளை இலை, பேய்ப்பீர்க்கு, பேய்க்குமட்டி, காஞ்சிரம் பழச்சாறு இவை அனைத்தையும் தலா 100 மில்லி வீதம் எடுத்து ஒரு சட்டியில் போட்டு 50 மில்லி வேப்பெண்ணெய் விட்டு மெழுகு பதம் காய்ச்சி ஆறிய பின் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு 1/8 டீஸ்பூன் நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூச்சி மற்றும் பல்பட்ட விஷம் குறையும்.