வாரத்துல ரெண்டு நாட்கள், இந்த கீரையை சாப்பிடுங்க..!
ஹாஸ்பிடல் பக்கம் எட்டிக் கூட பார்க்கமாட்டீங்க..!
"முருங்கை கீரை"
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.
முருங்கை இலையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்து இருக்க உதவும். மனப்பதற்றம் தணிக்கவும் வல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் இல்லை.
சோயாவில் தான் அதிகம் புரதசத்து உள்ளது என்று நம்பிய மருத்துவர்கள் இப்பொது புரதசத்து குறைபாட்டுக்கு முருங்கை கீரையை பரிந்துரைக்கின்றனர்.
ஒரு கைப்பிடி முருங்கை கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி அதனுடன் மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கை கீரை மட்டும் இன்றி முருங்கை பூவும் மருந்தாக பயன்படுகிறது. நரம்புகளுக்கு அதிகம் வலு கிடைக்கிறது.
முருங்கை கீரையில் தயிரில் உள்ளதை விட 2 மடங்கு அதிகம் புரதம் உள்ளது. மேலும் ஆரஞ்சு பழங்களில் உள்ளதை விட 7 மடங்கு வைட்டமின் சி உள்ளது.
மனிதர்களுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 வகை இந்த கீரையில் உள்ளது.
மனித உடலால் தயாரிக்க இயலாத 8 வகை அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டும் கிடைக்கும். ஆனால் அந்த 8 வகை அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கை கீரை