Sunday, 15 July 2018

சித்த மருத்துவத்தில் நச்சு நீக்கும்

சித்த மருத்துவத்தில் நச்சு நீக்கும் முறைகள் - 7  ⚛

ஆவாரம் பூ  சாறு

ஆவாரம் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றைத் தேன் கலந்து சாறாக்கிக் குடிக்க, சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமம் பொலிவாகும். சருமம் பளிச்சென இருக்கும்.

திரிபலா தேநீர்

கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் சேர்ந்த கலவைதான் திரிபலா. ஒரு கோப்பை வெந்நீரில் கால் தேக்கரண்டி திரிபலா பொடியைப் போட்டு, தேன் கலந்து, வாரம் இருமுறை குடிக்கலாம். கெட்ட கொழுப்பு, கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை அகற்றும்.

அருகம்புல் சாறு

ஒரு கைப்பிடி அருகம்புல், சீரகம், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து, சாறாக அடித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிக்க, உடலில் உள்ள தேவையற்ற தாதுஉப்புகள் வெளியேறும்.