எலும்புகள் வலுவாக உளுந்து சாதம்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 300 கிராம்
தோலுடன் உள்ள உளுந்து - 150 கிராம்
சீரகம் - 10 கிராம்
பூண்டு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துறுவல் - 1கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 700 மி.லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் அரிசி, தேவையான உப்பு மற்றும் உளுந்தைச் சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தட்டிய பூண்டு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து வேக வைத்த சாதத்தில் கலந்து தேங்காய் துறுவல் சேர்த்து இறக்கவும்.
இந்த சாதம் பெண்களுக்கு மிகவும் நல்லது.