Sunday, 13 October 2019

தினம் ஒரு கீரை !

தினம் ஒரு கீரை !
உணவோடு சேர் அக்கறையா !
 வைட்டமின் தாதும் இதில் அபரிமிதமா இருக்கு அற்புதமா பொறிக்கக் கூடாது இதை அதிகமாய் அவிக்கவும் கூடாது ! எக்காலத்துக்கும் ஏற்றது ஆயினும் இராத்திரியில் உடல் தாங்காது வாடி வதங்கியதை ஒதுக்கீடு நன்கு நீரில் அலசுவதே தோது !
அசைவத்துடன் கீரை உடம்புக்கு ஆகவே ஆகாது !
சிறிது நீர் போதும் கீரை வெந்து தனிய !
 கீரை வகைகள் பல உண்டு எந்த கீரை எந்நோய் தீர்க்கும் ஏற்றதை உணர்ந்து தினம் உண்டு வாழ்வில் ஏற்றத்தைக் காண்க !
இரத்த சோகையை விரட்டும் முருங்கைக்கீரை !
ஊட்டமளிக்கும் முளைக்கீரை !
உடல் வலிமைக்கு அரைக்கீரை
கண்ணுக்கு தெளிவூட்ட பொன்னாங்கண்ணி !
மூலத்தை சரிபடுத்தும் பசலை
 குழந்தைகளுக்குச் சிறுகீரை !
மூட்டுவலிக்கு முடக்கத்தான் சோர்வைப் போக்கும் தவசி அகத்தைச் சுத்தமாக்கும் அகத்தி புண்ஆற்றும் பருப்புக் கீரை !
புத்துணர்வுக்குப் புளிச்சக்கீரை ! வயிற்றுப்பசிக்கு வெந்தயக்கீரை வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி ! நினைவாற்றலுக்கு வல்லாரை !
சளித் தொல்லைக்கு தூதுவளை !
புற்றுநோய்க்கு பாலக்கீரை
பசியை தூண்டும் முள்ளங்கிக்கீரை!
ஆண்மை பெருக முருங்கை !
 கீரையில் உணவோடு மருந்து இது தானே நமக்கு விருந்து தினம் ஒன்ன சேர்த்திடுங்க தீங்கு வராம காத்திடுக !