Sunday, 13 October 2019

பித்தமே பிரதானம்.. பித்தமே சர்வ சக்தியும் !!!

பித்தமே பிரதானம்.. பித்தமே சர்வ சக்தியும் !!!

பித்தம் அடங்கினால் பேசாமல் போ என்பது சித்தர் வாக்கு..

பித்தம் அதாவது உஷ்ணம் ஆக்கவும் செய்யும் அதே சமயம் அழிக்கவும் செய்யும் !!!

நாம் நமது தாய் தந்தை பாட்டன் பூட்டன் பிறந்து  வாழ்ந்த  இடத்தில் இருந்து வேறு தொலைதூர இடத்திற்கு குடிபெயர்ந்து
போனால் நம் சரிரத்தில் பித்தம் அதிகரிக்கிறது.

 அந்த காலத்தில் பெண்களை வெகு தூரத்தில் எல்லாம் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள் !!!

பித்தமே உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதது.

அதே பித்தம் தான் நோய்வர காரணமாக அமைகிறது.

அளவுக்கு மிறினால் அது அமுதானாலும் நஞ்சு தானே..

நாம் என்பது இந்த பஞ்சபூதமான கலவையினால் ஆன உடல்.

இந்த பஞ்சபூத சக்தியான உடம்பை இயக்குவது இந்த உயிர்.

உடல் உஷ்ணம் அதிகரிக்க பித்தம் பிரதானம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் நம் வம்சாவளி முதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் நம் உடம்பும் உயிரும் பரிச்சியம் ஆயிருக்கும்.

அந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நமது மரபணுவும் பரிச்சியம் ஆயிருக்கும்.

அந்த சூழலில் இருந்து நாம் வெகு தூரத்திற்கு சென்று வாழ்வோமேயானால் உடல் அணுக்களின் செயல்பாடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிளது.

அந்த ஆதிர்வானது உடல் இயக்கத்தை பாதித்து ஒவ்வொரு உறுப்புகளும் அதன் செயல்ப்பாட்டை துரிதமாக்க முற்படுகிறது ஆனால் புதிதான சூழலுக்கு  உடன்பட நமது மரபணு அனுமதிக்காது.

ஆனாலும் நமது உறுப்புக்கள் சமன் செய்ய முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறது.

( நம் உடலில் உள்ள மரபணு நமது முதாதையரின் உண்ட உணவு அவர்கள் சந்தித்த நோய் அதை குணப்படுத்திய விதம் உடல் வாகு சிந்தனை எல்லாமே நமது மரபணுவில் பயனித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த ஆரோக்கியமான மரபணுவை நமது உடலில் பிரவேசிக்க விடாமல் தடுப்பதற்காக தீட்டிய வெகுநாள் திட்டம் தான் மரபணுமாற்றிய உணவு பொருள்கள் !!!

 அதனால் குழந்தையின்மை அதன் முலமாக நமது மரபணுவை அழிக்க செயற்கை கருவூட்டல் திட்டம்.

செயற்கை கருவூட்டல் மூலம் நமது முதாதையரின் மரபணுவை நமது உடலுக்குள் பிரவேசிக்கமல் தடுப்பது அதன் முலம் நோய்யை கொண்டுவந்து அந்த நோய்யை வைத்து வியாபாரம் செய்வது தான் மனித குல விரோதிகளின் திட்டம்

 (இலுமினாட்டி திட்டம்)

இதனால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது.

அதன் விளைவாக பித்தம் கூடுகிறது.

இதுவே உடலின் நோய் உருவாக ஏதுவாகிறது.

மனிதர்களை 7 வகையாக பிரிக்கலாம்

1. வாததோஷம் மட்டும் தனித்திருப்பது.

 2. பித்த தோஷம் மட்டும் தனித்திருப்பது.

3. கபம் மட்டும் தனித்திருப்பது என தனியே இருக்கும்

3 வகை.

 4. வாத பித்தம்
 5. பித்த கபம்.
6. வாத கபம் என இரட்டை தோஷங்களின் ஆதிக்கமுடைய 3 வகை.

 7. 3 தோஷங்களும் அதிகமிருந்து ஆதிக்கம் செலுத்தும் அரிதான ஒருவகை என்பன அவை.

இதனை ஒருவரின் பிரகிருதி என்பர்.

பித்ததோஷமே, செரிமானத்துக்கும், உருமாற்றத்துக்கும் காரணமாகிறது.

இது ஆரோக்கியத்துக்கு மிகவும் அடிப்படையான, தேவையான செயல். இது சரிவர நடந்தால் உடல்நலம் சரியாக இருக்கும்.

உடலின் வனப்புக்கும், பிரகாசத்திற்கும் காரணமாகிறது.

 பார்வை, பசி, தாகம், ஞாபகசக்தி, புத்தி கூர்மை, புலன் உறுப்புகளின் செயல்திறன் உடலின் மென்மை மற்றும் சக்தி ஆகியவற்றுக்கு காரணமாகிறது.

 சுரப்பிகளின்
செயல்பாடுகளுக்கு காரணமாகிறது.

நம் உள் உறுப்புகள் சிறுகுடல், பெறுங்குடல்,இதயம், இருதயஉறை,
நுரையீரல், கல்லீரல், பித்தப்பை, இரப்பை, மண்ணீரல், சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை, மூவெப்ப மண்டலம்
ஆகிய 12 இராஜ உருப்புக்களுக்கும் பித்தமே பிரதானம்.

 குறைந்தால் உடல் சமாளித்துக்கொள்ளும்
( குறைவதற்கு வாய்பு மிக குறைவு ).

நமது உடல் என்றைக்காவது 95 டிகிரி பாரன்கீட் சென்றதை கண்டது உண்டா நீங்கள்..???) ஆனால் அதிகமானால் உடலே ஆட்டம் கண்டுவிடும்.

ஆகவே தான் நான் சொல்கிறேன் பித்தமே பிரதானம்..

பித்தமே சர்வ சக்தியும்..ஆக்க சக்தியும் அதுவே அழிவு

 (இங்கு அழிவு என்பது நோய்யை குறிக்கிறது) சக்தியும் அதுவே..

இதில் இனைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். சிறுகுடல் பெருங்குடல் கபம் தான் என்றாலும் அதை இயக்கும் சக்தி பித்தமே.

 அதனால் தான் நாம் முன்னோர்கள் குளித்ததும் சாப்பிட கூடாது என்றனர் !!!

 குளித்ததும் வயிறு குளிர்ந்து இருக்கும்.

 அப்போது உஷ்ணம் (பித்தம்) இல்லாமல்  சிறு குடலால் ஜீரணம் செய்ய முடியாது.

ஆதலால் தான் குளித்து முடித்து அரைமணி நேரம் கழித்து உணவு அருந்த சொன்னார்கள் நம் முன்னோர்கள் !!!

 குளித்ததும் உணவு அருந்தினோமேயானால் அந்த ரசாயணம்    கலந்த உணவுக்கு உஷ்ணம் ஜீரணிக்க போதுமானதாக கிடைக்கும் வரை அதிக நேரம் சிறுகுடலில் இருக்க நேரிடும் அதனால் சிறுகுடல் உட்சுவர்கள் பாதிப்படைய நேரிடும் !!!

நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி எடுத்துக்கொள்வதின் சூட்சமமும் இதுவே !!!

சித்தர் காலத்தில் சோதிக்கப்பட்ட மருந்து எல்லாமே பித்தத்தை பிரதானமாக கொண்டு தான்.

அகத்தியர் பாடலை ஆராய்ந்து பார்த்தால்  உங்களுக்கே புலப்படும்.

 தீர்க்க முடியாத நோய்க்கு உங்கள் விதி பயனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று பெயர் சூட்டிவிட்டார்கள்.

அதே பித்தத்தை பிரதானமாக கொண்டு இப்போது உள்ள மானிடர்களுக்கு 
சிகிச்சை அளித்தால் மருந்து வேலை
செய்வதில்லை

மாறாக மருந்து நீர்த்து போகிறது அல்லது  தேகத்தின் பித்தத்தால்(நெருப்பு) கொடுக்கப்படும்
மருந்து எரிந்து போகிறது என்று ஆனித்தரமாக சொல்லலாம்.

குறிப்பு

பிறந்து ஒரு வருடம் வரையில் குழந்தையை வெளியில் விசேசதிற்கோ இல்லை வேறு ஏதாவது பண்டிகைக்கோ எடுத்து சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் குழந்தை அழ ஆரம்பிக்கும் உடனே குழந்தை வயிற்றில் சுத்தமான விளக்கெண்ணெய் தேய்த்தால் அந்த குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

எப்படி உஷ்ணம் அதிகரித்தது என்பது இப்போது புரிகிறதா...???

பெரியோர்கள் சொல்வார்கள் குழந்தைக்கு பலரது கண் பட்டிருக்கும் என்று.....

கண் என்பது உஷ்ணம் வெளிப்படும் ஒர் இடம் !!!

 அந்த பார்வையில் இருந்து வந்த உஷ்ணம் ( பித்தம்) தாக்கி இருக்கும் என்பது பொருள்..

மாதவிடாய் உள்ள நாட்களில் பெண்கள் உடல் இயல்புக்கு மாறாக உஷ்ணம் அதிகரித்து காணப்படும்.

ஆகவே சில தெய்வீக மூலிகைகளை தொடக்கூடாது என்பார்கள் !!!

 ( மருகு,தொழுதன்னி etc..).

இன்றைய அதிநவின வளர்ச்சி அடைந்த உலகம் என்று சொன்னாலும்.

எந்த நவின இயந்திரத்தை கொண்டும் நமது மரபணுவை ஆராய்வது அதன் செயல் திறனை பரிச்சித்து பார்பது என்பது இயலாத காரியமே..

முதலில் இயந்திரம் என்றால் என்ன..??? நம் அறிவை வைத்து கண்டுப்பித்தது தானே அந்த அதிநவின இயந்திரம்..???

 என்னத்தான் அதிநவின இயந்திரம் ( auto intelligent machine or robo) ஆனாலும் நாம் எந்தமாதிரி கட்டளைக்களையை கட்டமைத்து அந்த இயந்திரத்திற்கு சக்தி கொடுத்தோமோ அதற்கு ஏற்றவார்தானே எதிர் வினை கொடுக்கும்..

 அந்த இயந்திரத்தை கொண்டு பஞ்சபூத சக்தியை ஆராய்வது என்பது இயலாத காரியம் !!!

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.இதை விட எளிதாக என் எண்ணத்திற்கு சிந்தனைக்கும் சொல்வடிவம் கெடுப்பது கடினம்.

அடுத்த பதிவில் பற்பம் செந்தூரம் கொண்டு செய்யும் மருந்தை பற்றி பார்ப்போம். வெறும் கடுகு அல்லது அரிசி எடையே  அளவே கொடுத்து குணமாக்கும் மருந்து அது.

அது வரையில் எனது எல்லா பதிவையும் படித்து தெளிவு பெறுங்கள்.. நன்றி

தகவல் இறை அருள் வைத்தியர் மாலிக்
8220320197

நன்றி சிரவண குமா