எல்லா வகை மூலமும் நீங்க:-
தானென்ற மூலத்துக்கு உறுதி சொல்வேன்
தயங்காத மூலமென்ற தெல்லாம் போகும்
தேனென்ற புல்லறுகு துளிரவைத்து
செழுமையுள்ள தண்ணீரில் குடித்தாயானால்
ஊனென்ற மூலமெல்லாம் தீரும் தீரும்
உத்தமனே ஈரஞ்சு நாளில் மைந்தா
வீனென்ற மூலமெல்லாம் ஒழிந்து போகும்
- அமுத கலைஞானம் 1200
அறுகம்புல்லை பிடிங்கி வந்து தூய்மையான தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் அதை இறக்கி வடித்து அரை டம்ளர் வீதம் பத்து நாட்கள் காலை-மாலை உணவுக்கு முன்பு அருந்தினால் எல்லா வகை மூலமும் கண்டிப்பாக நீங்கி போகும் என்கிறார் அகத்தியர்.