சிறுநீரகம்செயலிழந்த #நோயாளிகள்இந்துப்பு
பயன்படுத்துவது தற்கொலை_முயற்சிக்கு #சமம் .!!!
சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள் இந்துப்பு பயன்படுத்துகிறீர்களா… ?!
ஆம் எனில் நீங்கள் தற்கொலை முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றே கூறவேண்டும் …
இதற்கு முழுக்க காரணமாக இருப்பது அறியாமையே ….
படிப்பறிவில்லா மக்கள் முதல் மெத்த படித்த மேதாவிகள் வரை இந்த அறியாமை பரவி பசுமரத்தாணி போல் அனைவரின் மனத்திலும் பதிந்துவிட்டது..
காரணம் தவறான இணைய பதிவுகளே ….
பாரம்பரிய மருத்துவம் அல்லது மூலிகை மருந்து என்ற பெயரில் பதிவுகளை வெளியிட்டால் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு அதனை பின்பற்றுவது , யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போலாகும் …..
இதை விட பெரிய கொடுமை சிறுநீரக நோயாளிகள் இந்துப்பு பயன்படுத்துவதை
ஆமோதிப்பதும் , சிலர் கண்டும் காணாமல் இருப்பதும் மிகுந்த வேதனைக்குரிய
விஷயம்……😱
சிறுநீரக நோயாளிகள் இந்துப்பை குணமாக்கும் என்று பயன்படுத்தினால் மிக மிக மோசமான மீள முடியாத பாதிப்பையே ஏற்படுத்தும்.
சிறுநீரகம் செயலிழந்த நோய்யாளிகளே, அவர்களை அக்கறையுடன் பராமரிக்கும் உறவினர்களே சற்றே சிந்தித்து செயலாற்றுங்கள் …
சாதாரண உப்பின் மூலக்கூறுகளும் , இந்துப்பின் மூலக்கூறுகளும் ஏறத்தாழ ஒன்றே ...
அப்படி இருக்க எவ்வாறு இந்துப்பு கிட்னி பெய்லியர்க்கு மருந்தாக அமையும் ?
செயலிழந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்கவோ , புதுப்பிக்கவோ இந்துப்பில் எந்த ஒரு மருத்துவ குணமும் இல்லை……😳
கடல் உப்பை விட இந்துப்பு சிறந்தது..
இந்துப்பு சிறந்து என்பதால் அது #செயல்இழந்த #கிட்னியைஇரண்டு #வாரத்தில்_சரியாக்கும் என்பது எல்லாம் ஒரு மிக மிக மிகைப்படுத்தப்பட்ட –எந்த ஒரு ஆதாரம் இல்லாத #கட்டுக்கதை .
சாதாரண உப்பை பயன்படுத்துவதால் உடலில் என்னென்ன கெடுதல்கள் ஏற்படுமோ அவை இந்துப்பு பயன்படுத்துவதால் ஏற்படாமல் தவிர்த்துகொள்ளமே தவிர , சிறுநீரகம் செயல்பட எவ்வகையிலும் பயன்படாது....
மேலும் மாறாக இரத்தத்தில் உள்ள உப்பின் அளவு அதிகரித்து உயிரை (சிறுநீரக நோயாளிகளின் ) பறித்துவிடும் வாய்ப்புகள் அதிகரித்துவிடும் …
ஏனெனில் இந்துப்பும் உப்பே……😳 ❗
புரியும்வண்ணம் ஓர் எடுத்துக்காட்டு………
மிளகும், திப்பிலியும் ஆரோக்கியத்திற்கு அரும்மருந்து என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ....
ஆனால் வாய்ப்புண் , வயிற்றுப்புண் கொண்டு அவதிப்படும் நிலையில் உள்ளவர்கள் அதை உண்போமா ?
நிச்சயமாக உண்ணமாட்டோம்... எடுத்துக்
கொண்டோமனால் தொல்லை அதிகரிக்கும்…..
இதுவே உண்மை.....
இந்துப்பு ஆரோக்கியமாக உள்ள அனைவருக்கும் சிறந்த ஒன்று...
ஏன் சிறுநீரக பாதிப்பு தவிர மற்ற நோயாளிகள் அனைவருக்குமே நன்மையளிக்கும் ஒன்று...
ஆனால் சிறுநீரக செயல்பாடு இல்லாத- சிறுநீரக செயல்பாடு குறைவு உள்ள நோயாளிகள் எடுத்துக்கொண்டால் #மறைமுகமாக #தற்கொலைக்கு அவர்களுக்கு தெரியாமல் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றே பொருள்..