Friday, 28 June 2019

விதைகளே பேராயுதம்...! கோ.நம்மாழ்வார்

விதைகளே பேராயுதம்...! கோ.நம்மாழ்வார்

” தேன்கனி பாரம்பரிய விதைத் திருவிழா, கண்காட்சி & கருத்தரங்கு ” :
*************
நிகழ்ச்சி பகிர்வு :
ஜெ.கருப்பசாமி

     நம்மாழ்வார் ஐயா விதைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடந்த காலத்தில் நடந்த சம்பத்தை விளக்குவார்.

     நமது முன்னோர்கள் கடும் வறட்சியை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அப்போது அடுத்த வருடத்திற்குத் விதைக்கத் தேவையான விதை மட்டுமே கையிருப்பு உள்ளது.

   எப்படியும் மழைவரும், மழை வந்தால் கையிருப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட விதையை விதைத்து பஞ்சத்தில் இருந்து மீண்டு விடலாம் என காத்திருந்தனர்.

    ஒருநிலையில் அடுத்த வேளை உண்பதற்கு கையிருப்பாக உள்ள தானியங்களும் தீர்ந்து விட்டது. ஆகையால் உணவு இல்லாமல் பலரும் மாண்டனர். அப்போதும் கூட ” விதைக்காக வைக்கப்பட்ட தானியத்தை “ உண்ணாமல் உயிரிழந்தனர்.

      நமது முன்னோர்கள் விதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் இன்று அளிக்கிறோமா ?

     நாளை விதைக்க இரவு தான் விதை கடைக்கு சென்று மறு முளைப்பு இல்லாத, வறட்சி தாங்காத கம்பெனிகளின் விதையை வாங்கி பயன்படுத்தும்படி பழக்கப்படுத்தி விட்டார்கள்.

இந்நிலை மாறிட ?

  மறுபடியும் நம் முன்னோர்களின் பாரம்பரிய அறிவுகளையும், தொழில் நுட்பத்தையும், தொலைத்த பல லட்சரக மண்ணின் விதைகளையும் மீட்போம். மேலும் மரபு விதையின் முளைப்பை சோத்திக்கும் சோதனையான “ முளைப்பாரி “ போன்ற தொழில்நுட்பத்தையும் மீட்டு ” விதைப் பாதுகாவலர்களை “ உருவாக்குவோம்.

      இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் இன்று உள்ளது. அந்த வேலையை வானகமும், தேன்கனி அமைப்பும் போன்ற பலர் கையில் எடுத்துள்ளதுனர்.

மரபு விதைநாள் :
********
        அந்த வகையில் இயற்கை வழி விவசாயத்தை வாழ்வியலாக அனைத்து தரப்பினரின் மனதிலும் விதையாக விதைத்த நம்மாழ்வார் ஐயாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் ” மரபு விதை நாளாக “ ஏப்ரல் 6ம் தேதி வானகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

      இந்நிகழ்வில் தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் விவசாயிகளும், தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொண்டு 
ஒவ்வொரு ஆண்டும் விதைத்து பாதுகாத்த விதைகளை, ஐயாவின் காலடியில் விதைப் படையலும், முளைப்பாரியும் வைத்து அடுத்தவருட களப்பணியைத் தொடங்குவோம்.

” பாரம்பரிய விதைத் திருவிழா, கண்காட்சி & கருத்தரங்கு ” :
***********
    அதன் பின்னர் தேன்கனி அமைப்பானது ஒவ்வொரு பகுதியிலும் இந்த மரபு விதைகளை அனைத்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும், குழந்தைகளும் காட்சிப்படுத்தி அதன் சிறப்புகளையும் தனித்துவத்தையும் விளக்கி சிறு சிறு நிகழ்வாக நடத்துவது வழக்கம்.

  மேலும் அந்நிகழ்வில் விதைப் பாதுகாவலர்களையும் அறிமுகப்படுத்தி சிறப்பிப்பது தேன்கனி  கூட்டமைப்பினரின் வழக்கம். அதுபோல் இந்தாண்டும் 4ம் ஆண்டாக “ விதைத் திருவிழா “ மூலமாக விதைகளை பரவலாக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

நாள் : 14-7-2019 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை

இடம் : ராக்லாண்ட் பள்ளி, SCMS பள்ளிபின்புறம்,
சாட்சியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.

நிகழ்வு இடத்தை வந்தடைய இணைய வழி :
https://maps.google.com/?cid=5393687954330068139&hl=en&gl=gb

அனுமதி இலவசம்.
மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தொடர்புக்கு: 94435 75431, 96554 37242, 9787648002.

நிகழ்வில்

விதை அரசியல் & மீட்பு கருத்தரங்கு :
*************
     விதையில் உலக அளவில் நடைபெறும் அரசியலும், அதிலிருந்து மீண்டு வருவதும் குறித்து உலகமுழுவதும் சுற்றி இயற்கை வழி விவசாயத்தை பரப்ப நம்மாழ்வார் ஐயாவோடு பல ஆண்டு களப்பணியாற்றி வருபவர்.

தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டமைப்பின் தலைவர்
அறச்சலூர் திரு. செல்வம் ஐயா அவர்கள் தன்னுடைய அனுபவத்தைப் பகிர உள்ளார்.

       விதை சேகரிப்பு, பாதுகாப்பு, பயிரிடல் நுட்பங்கள் குறித்து இயற்கை விவசாயிகள் பலர் தங்கள் அனுபவங்களை பகிர உள்ளார்கள்.

மரபு விதைக் கண்காட்சியில் :
***********
* 35 வகையான பாரம்பரிய சோளவிதை
• வறட்சியைத் தாங்கும் மானவாரி கருந்தானிய விதைகள்
• பாரம்பரிய நாட்டுக் காய்கறி, கீரை விதைகள்
• கால்நடைகளுக்கான தீவன விதைகள்
• மானாவரிப் பயறு வகைகள்
• எண்ணெய் வித்துக்கள்
• பாரம்பரிய நெல் ரகங்கள்
• உயிர்வேலி விதைகள்
• மண்ணை வளப்படுத்தும் பலதானியப் பயிர்களும், முளைப்பாரியும்
• விவசாயப் பணிகளை எளிமைப் படுத்தும் பண்ணைக் கருவிகள்
• மாடித் தோட்டப் பைகள்
• விதைப் பாதுகாவலர்களின் அனுபவப் பகிர்வு
•  தேன்கனி உழவர் சந்தை & மதிப்புக்கூட்டப்பட்ட பலகாரங்கள்
* மரபு கலைகள்

     நிகழ்வில் இயற்கை வழி விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை கண்காட்சிப் படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

fb/thenkanivalviyalmaiyam
www.thenkanivalviyalmaiyam.blogspot.com
நன்றி..

#saveseeds #savefarmers #தேன்கனி #நாட்டுவிதை