சளியை குணமாக்கும் துளசி ரசம்!!
சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் பிரச்சனை உள்ளவர்களுக்கு துளசி ரசம் அருமையான மருந்தாகும். இப்போது இந்த துளசி ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ப.சுப்ரமணிகவிதா
தேவையானப் பொருட்கள் :
துளசி இலை - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
🍔 முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் துளசியை நன்றாக கழுவி தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
🍔 பிறகு புளியை நன்றாக கரைத்து சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிட வேண்டும். பின் ஊற வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொதிக்கும் கரைசலில் சேர்க்க வேண்டும்.
🍔 பின்னர் ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியை சேர்த்து, நுரைத்ததும் இறக்க வேண்டும். கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்தால், சூப்பரான துளசி ரசம் தயார்!!!.