Monday, 27 August 2018

வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங்!

வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங்!

இப்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களினாலேயே மிக சிறிய வயதில் உடல் பருமன், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது- வாக்கிங் போங்க என்பதுதான்.

வாக்கிங் எனப்படும் நடை பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. தற்போதெல்லாம் எங்கும் எல்லோரும் கையை வீசிக் கொண்டு வேகமாக நடக்கின்றனர். அதிலும் முன்பெல்லாம் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் வாக்கிங்கில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால் இன்று வரும் புதுப் புது நோய்களால் `10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட நிறைய பேர் இந்த நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆக ,நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகி விட்டது

இந்நிலையில் கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெறலாம்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்த வராக (தரையை பார்க் காமல்) இருபது அடி முன் னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதா ரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்தி ருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்க வாட்டில் ஆட்டாமல்), அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடி களை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல் களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங் கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியின் வகைகள்:

நடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடப்பது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.உடல் வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவற தோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராம லும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ள வங்களுக்கு ஏற்ற நடை இது.