எண்ணெய் கொப்பளித்தல்
இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.