Monday, 27 August 2018

பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
#1 :
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

ஒரிஜினல் மலை வாழ் ஆதிவாசிகளின் காபித்தூள் சுவைத்ததுண்டா?

நித்ரா தமிழ் அகராதி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/2kCLQZ

ஒரிஜினல் மலை வாழ் ஆதிவாசிகளின் காபித்தூள் சுவைத்ததுண்டா?
இன்றும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை வாழும் குழுக்கள் கூடலூர் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையை அழித்து எதையும் எடுக்கக்கூடாது. இயற்கையாய் கொடுப்பதை நமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் உயரிய சிந்தனை இவர்களிடம் உண்டு. நம்மால் ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்டாலும் இந்த நிலத்தில் பூர்வக்குடிகள் பழக்கவழக்கங்களை இன்றும் கடைபிடித்து ஆரோக்கியமாகவும், சுற்றுச்சூழல் பேணியும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆங்கிலேயே ஆட்சிக்குப் பின்பு பெரும்பாலும் காபி தோட்டங்களாக மாற்றப்பட்ட மலைகளில் இவர்கள் இன்று வரை காபி சாகுபடியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவசரத்துக்கு கடன் கொடுப்பதாக சொல்லி இவர்களுக்கு பணத்தை வழங்கி விட்டு பிறகு காபி விற்பனை நேரத்தில் அந்த கடனை காரணம் காட்டி அடிமாட்டு விலைக்கு காபி கொட்டைகளை இவர்களிடம் இருந்து பறித்து வந்தனர் ஒரு சிலர். இதுபோன்ற பல காரணங்களால் தங்களின் வாழ்க்கை முறை மேம்பாடு அடைய வாய்ப்பில்லாமல் இருந்து வந்தனர் இந்த ஆதிவாசிகள்.


👆👆👆
ஆனால் இப்பொழுது இவர்களின் சிக்கல் உணர்ந்து இவர்களை குழுக்களாக இணைத்து ஆதிவாசி குழு ஒன்றை நிறுவி இவர்களின் வேளாண்மையை இவர்களே சந்தைப்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன நேட்டிவ்ஸ்பெஷல் போன்ற நம் பாரம்பரியத்தை நேசிக்கும் நிறுவனங்கள். இன்று மிக மிக தரமான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காபி தூள் இவர்களிடம் இருந்து நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. நல்ல விலைக்கு இவர்களிடம் இருந்து வாங்கி கொள்வதால் இவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக வளர்ந்திருக்கிறது.

இதைப்பற்றி நேட்டிவ்ஸ்பெஷலின் நிறுவனர்களின் ஒருவரான திரு.பார்த்திபன் அவர்களிடம் கேட்ட பொழுது, 'நேட்டிவ்ஸ்பெஷல் எனும் இணையம் துவக்கப்பட்டதே இதுபோன்று நம்ம ஊர் பாரம்பரிய பொருட்களை சந்தைப்படுத்தி அதன் பலனை சமூகத்தின் கடை நிலையில் இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே, அதன் பலனை கண் முன்னே காணும்பொழுது அது கண்டிப்பாக மித மிஞ்சிய மகிழ்வைத் தருகிறது" என்கிறார்.


நேட்டிவ் ஸ்பெஷல் இணையத்தில் காபி தூளை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !!
இயற்கைக்கு எதிராக எதையும் செய்வதில்லை என்ற ஆதிவாசிகளின் கோட்பாட்டுக்கு இணங்க முற்றிலும் இயற்கை முறைப்படி தயார் செய்யப்படும் 'ஆதிவாசி காபி தூள்" நேரடியாக நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம். ஓரிரு நாட்களில் நேரடியாக வீட்டில் டெலிவரி செய்யப்படும். கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உண்டு.

மிகவும் ஸ்ட்ராங்கான இந்த காபி தூளினை ஒரு முறை பயன்படுத்தி ஒரிஜினல் காபியின் ருசியினை உணருங்கள்.





நித்ரா தமிழ் அகராதியை இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/2kCLQZ

வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங்!

வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங்!

இப்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களினாலேயே மிக சிறிய வயதில் உடல் பருமன், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது- வாக்கிங் போங்க என்பதுதான்.

வாக்கிங் எனப்படும் நடை பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. தற்போதெல்லாம் எங்கும் எல்லோரும் கையை வீசிக் கொண்டு வேகமாக நடக்கின்றனர். அதிலும் முன்பெல்லாம் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் வாக்கிங்கில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால் இன்று வரும் புதுப் புது நோய்களால் `10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட நிறைய பேர் இந்த நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆக ,நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகி விட்டது

இந்நிலையில் கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெறலாம்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்த வராக (தரையை பார்க் காமல்) இருபது அடி முன் னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதா ரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்தி ருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்க வாட்டில் ஆட்டாமல்), அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடி களை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல் களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங் கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியின் வகைகள்:

நடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடப்பது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.உடல் வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவற தோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராம லும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ள வங்களுக்கு ஏற்ற நடை இது.

சர்க்கரை வியாதி என்பதை பொய் என்று நிரூபித்த டாக்டர.

சர்க்கரை வியாதி என்பதை பொய் என்று நிரூபித்த அந்த டாக்டர.


தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

உடலும் மனமும் திடமாக இருப்பதே உண்மையான அழகு. நம் முன்னோர்கள், ஒரு தாய் கருவுற்றிருக்கும் போதே சிசுவிற்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். வியப்பில் ஆழ்த்தும் எண்ணற்ற அஞ்சறைப் பெட்டிப் பொருள்களை நாட்டு வைத்தியமாகக் கடைபிடித்திருக்கின்றனர். அதிலும் பெண் குழந்தைகள் என்று கருதினால் அழகிற்கும் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னெச்சரிக்கையாக கை வைத்தியங்கள் செய்திருக்கின்றனர். பெண் தாய்மையடைந்த நேரத்தில் மருந்து கொடுப்பது தொடங்கி, சாத்திரங்கள், சடங்குகள் எனப் பல்வேறு முறைகளாக வைத்திருந்தனர். அவற்றை மூடநம்பிக்கைகள் எனப் புறக்கணித்தாலும் அதற்குள் இருக்கும் மருத்துவ உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.

குழந்தை பிறந்த சில நாள்களில் காய்ந்து விழுந்த தொப்புள் கொடியைத் தாயத்தில் வைத்து கழுத்தில் அணிவித்திருக்கிறார்கள். ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான காலகட்டத்தில் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்று உலக அளவில் நடக்கின்றன. இதை நம் மூத்தகுடிகள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
இன்றைக்கும் கிராமங்களில் கடுக்காய், வசம்பு இவற்றைக் கொண்ட காப்பினை கைகளில் அணிகின்றனர். செரிமானக் கோளாறு, சுறுசுறுப்பின்மையால் மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு உரைத்து பாலாடையில் கொடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நாம் மறந்துபோன ஒரு மரப்பாச்சி பொம்மை. மருத்துவக் குணம் கொண்ட சந்தனம், செம்மரம், ஈட்டி மரத்தினால் செய்யப்படுவது. குழந்தைகள் கடித்து விளையாடினாலும் தோல்களில் பட்டாலும் சந்தனத்தின் தன்மையால் தோல் அழற்சி, சிறு சிறு வேனல் கட்டிகள் நீங்கும் எனக் கூறுகின்றனர். உடல் சூட்டைத் தணிக்க காப்பரினால் ஆன காப்பு அணிவதும், இயற்கையாக வீட்டிலேயே செய்த கண்மையினை விளக்கெண்ணெய் கலந்து கண்கள், கன்னங்கள், பாதங்களில் இட்டிருக்கின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக பச்சைப்பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர்  கலந்த நலங்கு மாவு வீட்டிலேயே தயார் செய்யப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் முறையற்ற துரித உணவுகளாலும், பரபரப்பான வாழ்க்கை சூழல் மற்றும் மனஉளைச்சலாலும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் பெருகிவிட்டன. குறிப்பாக நீர்க்கட்டிகள் (PCOS). இதனால் முகம் முழுவதும் பருக்களும், கருப்புத் திட்டுகளும் உருவாகின்றன. மீசை போல முடிகள் அதிகம் வளர்வதும் நிகழ்கிறது. இன்று எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் வந்து விட்டன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எண்ணப்பாட்டிற்காக மட்டும் சொல்லிச் செல்லவில்லை. உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் தீங்கினை வெளிக்காட்டும் முதல் அறிகுறியாக செயல்படுவது தோல்.  அடிப்படை சிகிச்சை பெறாமல் இறக்குமதி செய்யப்பட்ட பவுடர்களால் மறைத்து அழகாக காட்டிக் கொள்வது ஆபத்தானது.  இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மிஷா பெப்சி விரிவாகப் பேசுகிறார்.

நவீன உலகில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவைகளை எதிர்த்துப் போராடுவதிலேயே தங்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இயற்கையான காய்கறிகள், பழங்கள், தானியவகைகள் இவற்றோடு உடற்பயிற்சியும்  உடல் சுத்தமும் பேணிக்காத்தால் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம். பொதுவாகவே பெண்கள் பூப்படைந்தபின் மாதவிலக்கில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரும்புச் சத்து மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உதிரப்போக்குகள் ஏற்படக்கூடும். அதற்கு வெல்லம், பேரீச்சம்பழம், மாதுளம்பழம்  போன்றவற்றை உண்ண வேண்டும். ஆட்டு ஈரல் போன்ற இறைச்சி வகைகளும் நலம் பயக்கும்.

சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ, முகத்தில் அழுக்கு சேர்ந்தாலோ ஹார்மோன்  சுரப்பிகள் சரியான அளவில் சுரக்காமல் இருந்தாலோ முகத்தில் நிறைய பருக்கள் வர வாய்ப்புள்ளன. வெள்ளைப்படுதல், புற்றுநோய், நோய்த்தொற்று, உடல்பருமன், வயிற்று வலி, முடிகொட்டுதல் எனப் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஒருபுறம், பெரும் வளர்ச்சி கண்ட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் புதிது புதிகாக நோய்கள் உருவாகின்றன. மறுபுறம், அதற்கான தடுப்புமுறை ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. நோய் வராமல் காப்பதும், நோய் வந்தபின் தகுந்த சிகிச்சை மூலம் உடலைப் பேணிக்காப்பதுமே சிறந்தது எனக் கூறினார்.

சமீபத்திய நோய்களின் பெருக்கம் அச்சமாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு பெண் பூப்படைந்தால், கருமுட்டை வளர்ச்சிக்கும், இடுப்பு எலும்பின் வலுவுக்கும் நல்லது என வீட்டுப் பெரியவர்கள் முளைக் கீரை விதைகளை உண்ணக் கொடுத்தனர், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் நாட்டுக் கோழி முட்டை கலந்தும், தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் நல்லெண்ணெய் குழைத்தும் கழி செய்து கொடுத்தனர்.

பூப்பு நீராட்டுவிழாவாக கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் விழா எடுக்கப்பட்டது. வளைகாப்பிற்கான ஏழு வகை சோறும், சடங்கு நாள் அன்றைக்கான பருப்பு சோறும், தாய்மாமன் வீட்டு புட்டும் செய்வதற்கான பொருட்களெல்லாம் இன்றும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன.அதன் மகத்துவம் அறியாமல் நாம்தான் அலுப்புடன் அலட்சியப்படுத்துகிறோம். சிந்தித்துப் பார்த்தால், பாரம்பரியம் நிறைந்த நம் மண்பானை வாழ்வியலில், அளப்பரிய பெரும் மருத்துவ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நாகரிகம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தொலைத்து, ரசாயனங்களுக்கு அடிமையாகிவிட்டோம்.

இப்போதொன்றும் காலம் கடந்து விடவில்லை. எழுதப்படாத நம் மூதாதையரின் அறிவியல் அறிவை, பெண்களாகிய நாம் நடைமுறையில் மீட்டெடுக்க மீள் முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கிய வாழ்க்கையை சாத்தியப்படுத்த வேண்டும்.

குதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..!

குதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..!

குதிக்கால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.

அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும். நமக்கு தேவை அந்த எலுமிச்சை தோல் மட்டும் தான். சற்றே காய்ந்த அந்த தோலை எடுத்து, அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிக்கால் வெடிப்புகளை முழுவதும் கவர் செய்யிம்படியாக வைக்கவேண்டும்.

பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய உதவும். இதை இரவு நேரங்களில் பின்பற்றுவதால், எங்கும் நடக்காமல் ஓரிடத்தில் இருப்பதால் நல்ல பலன் அடையமுடியும். எலுமிச்சையின் நறுமணம் இரவு உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்க உதவும். இதை தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் குதிக்கால் வெடிப்பு மெல்ல, மெல்ல குணமடைவதை நன்கு உணர முடியும்.

இரத்தத்தில் pH அளவும் - எலும்பு, மூட்டு வலியும்.

இரத்தத்தில் pH அளவும் - எலும்பு, மூட்டு வலியும்.
**************
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். ( pH என்பது "potential of Hydrogen " ) . ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ) . ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது. ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை . அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும்போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே, இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது. எனவே எலும்பு ,மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O. WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள். இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்

நெஞ்சு சளி

நெஞ்சு சளி கட்டி இருக்கும்

நண்டு சூப் குடியுங்கள்,பிரண்டை ரசம் ,தூதுவளை ரசம் செய்து குடித்தால் இறங்கி விடும்

இரவு தூங்கும்முன் பாலில் மஞ்சள் சிறுது சேர்த்து குடியுங்கள்


Kari Leaf

Kari Leaf




சளியை குணமாக்கும் துளசி ரசம்!!

சளியை குணமாக்கும் துளசி ரசம்!!
சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் பிரச்சனை உள்ளவர்களுக்கு துளசி ரசம் அருமையான மருந்தாகும். இப்போது இந்த துளசி ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ப.சுப்ரமணிகவிதா

தேவையானப் பொருட்கள் :
துளசி இலை - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
🍔 முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் துளசியை நன்றாக கழுவி தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
🍔 பிறகு புளியை நன்றாக கரைத்து சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிட வேண்டும். பின் ஊற வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொதிக்கும் கரைசலில் சேர்க்க வேண்டும்.
🍔 பின்னர் ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியை சேர்த்து, நுரைத்ததும் இறக்க வேண்டும். கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்தால், சூப்பரான துளசி ரசம் தயார்!!!.

கர்நாடகாவில் கொடுக்கப்படும் கேன்சர் ஆயுர்வேத சிகிச்சை பற்றிய விபரம்!

கர்நாடகாவில் கொடுக்கப்படும் கேன்சர் ஆயுர்வேத சிகிச்சை பற்றிய விபரம்!

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.

ரத்த சோகை :
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.

மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் அதிகரிக்க :
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.

இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.

அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.

சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.

பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

Say Good Bye to Back Pain

Say Good Bye to Back Pain






Cancer Cure








எண்ணெய் கொப்பளித்தல்

 எண்ணெய் கொப்பளித்தல் 

 இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:

சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.

அக்குபஞ்சர் ஒரு அறிமுகம்




👉 1 முதல் 50 வரை

🔗 1. அக்குபஞ்சர் ஒரு அறிமுகம் https://youtu.be/Bi83GG3JMUA
3. அக்குபஞ்சரில் நோய் தீர்வு https://youtu.be/O_XlCpDxG9w
4. ACUPUNCTURE FIRST AID https://youtu.be/IaixO9O54S4
5. மஞ்சள் காமாலை அறிகுறிகள் https://youtu.be/G83fv4WIjtw
6. அக்குபஞ்சரில் தூக்கமின்மைக்கு  தீர்வு https://youtu.be/4VaFnXoFWS4
7. மன அழுத்ததிற்க்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/GmAQt5Jp2XM
8. நுரையீரல் பிரச்சனைக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/vJKl63iPfds
9. உள் உடல் உறுப்பு வலிகள் https://youtu.be/I3A46rjm7rI
10. உயர் இரத்த அழுத்ததிற்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/HBHdLGgF_Nk
11. இரத்த போக்கை கட்டுப்படுத்தும் அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/RKBkHfZO23o
12. தலைவலிக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/aIgR5c_LG9s
13. கழுத்து வலிக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/4xTgAVHlORk
14. வலிப்பு நோயிக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/HK2sGpWF963
15. முள்ளங்கியின் மருத்துவ தன்மை https://youtu.be/zbhvHMFpPqM
16. உயிர் சக்தி ஓட்டம் https://youtu.be/tu3R3I2gMVQ
17. வெளி உடல் உறுப்பின் தன்மைகள் https://youtu.be/qFx3KZOlP0s
18. ஞாபக சக்திக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/d5h6oWNx3dg
19. ஞாபக சக்திக்கு வல்லாரை கீரை https://youtu.be/yQcLahpabqM
20. ஒரு புள்ளி பல நோய்க்கு தீர்வு https://youtu.be/gS92UTfu3R8
21. அறுசுவை மருத்துவ தன்மை https://youtu.be/XaSmdI8QEiw
22. ஞாபக சக்தியை அதிகரிக்க அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/5pTHvBC6EaM
23. வாழைத்தண்டு மகத்துவம் https://youtu.be/UK2sGpWF970
24. இரத்த அழுத்தத்திற்க்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/1kHix891i_A
25. பூசணிக்காய் மருத்துவ தன்மை https://youtu.be/MHUVZgtcMx4
26. இஞ்சியின் மருத்துவ தன்மை https://youtu.be/n6lHv9tAnBE
27. வயிற்று வலிக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/3V9OdnhgSOY
28. வெப்பத்தால் ஏற்ப்படும் பிரச்சனைக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/K7t8qT73AeA
29. கால் வீக்கம் குறைக்க அக்கபஞ்சர் புள்ளி https://youtu.be/tgyojpVhJBI
30. ஒற்றை தலைவலிக்கு அக்குபஞ்சரில் இரண்டு புள்ளிகள் https://youtu.be/TA8DBGv_eTs
31. வலி நிவாரணிக்கு இரண்டு அக்கபஞ்சர் புள்ளிகள் https://youtu.be/cTsq57pqxl4
32. நெஞ்சு வலிக்கு அக்குபஞ்சரில்  முதல் உதவி https://youtu.be/CqEq63JspOE
33. தொப்பை குறைய அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/r08BYoSrdoM
34. அடி முதுகு வலிக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/479eg96183s
35. முடி உதிர்வை கட்டுப்படுத்தும் அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/4GZ-RaSGaLE
36. கை விரலில் ரகசிய வைத்தியம் https://youtu.be/X4gvW-YcRN4
37. காய்சல் போக்க அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/UZ2D4Z7M2jo
38. உடல் சுறுசுறுப்புக்கு தடா சணம் https://youtu.be/SrdZF9FqXHc
39. நெச்சு சளியை  போக்க அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/YlWto513xS0
40. கண் பார்வை கோளாறுக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/VCsbLZJ4r54
41. யோக மற்றும் வருண முத்திரையால் ஏற்படும் நன்மைகள் https://youtu.be/RcPhN5h865U
42. பீர்க்கங்காயின் மருத்துவ தன்மை https://youtu.be/OdKsUvWphLs
43. கவலை மற்றும் பயத்தை போக்க அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/1ZrKY2xb8pU
44. நோய் எதிர்ப்பு சக்திக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/jjeOKYeqNH4
45. மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் அக்குபஞ்சர் புள்ளி
46. அடிகுதிங்கால் வலிக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/ylsSgwZBMOX
47. அக்குபஞ்சரில் ஒரு அற்புத புள்ளி https://youtu.be/ocAMUucLDmw
48. வியர்வையை கட்டுப்படுத்தும் அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/JZYsyhRtZWs
49. நீர்கடுப்பு குணமாக அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/3xL3FxDxMbA
50. காது கேளாமைக்கு அக்குபஞ்சர் புள்ளி https://youtu.be/mh-go8VSYPA

Our body is a natural doctor

Our body is a natural doctor

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும்x- அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. 🔴

🌿எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். 🌿

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? 👆🏿

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

இளநீர்☘*

இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.


Multiple Treatment -- இரும்பால்



தோல் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும்
மஞ்சள், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து


கற்பூரவள்ளி சாறு எடுத்து குடித்தால் சளி, இரும்பால் சரியாகும்

மிளகு சீரகம் போட்டு புதினா சூப் செய்து சாப்பிடலாம்

தூதுவளை இலையை நிழலில் உலர காயவைத்து பவுடர்போல் அறைத்து பாலில் போட்டு குடிக்க வேண்டும்.

Prevents fibrosis of kidney n liver

Prevents fibrosis of kidney n liver


எச்சரிக்கை! தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!

எச்சரிக்கை! தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.

34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது.

7 day Weight Loss Diet Plan Chart in Tamil

7 day Weight Loss Diet Plan Chart in Tamil


தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம்


வாய் துர்நாற்றத்துக்கு என்ன மருந்து இருக்கு?

வாய் துர்நாற்றத்துக்கு என்ன மருந்து இருக்கு?





  1. Elumichai 2 ,3 thuli மிதமான வெந்நீரில் வாய் கொப்பளியுங்கள்...,
  2. திரிபலா சூரணத்தினால் பல் துலக்கவும். சாப்பிட்ட பின்னர் காசி கட்டி மாத்திரை சப்பி சாப்பிட வேண்டும்.

பச்சை தேங்காயின் பயன்கள்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் 
என்று நிறைய பேர் கைவிட்டனர் 
உண்மை இதோ :--பச்சை தேங்காயின் பயன்கள்

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்....

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...

இரத்தத்தை சுத்தமாக்கும்...

உடலை உரமாக்கும்.....

உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....

இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...

குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)

தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி முடித்து விடுகிறார்கள்.

தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்....

காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...

How to sleep in proper way?


7 நாட்களில் பித்தப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம் பற்றி தெரியுமா?