Sunday, 13 October 2019

நோயின்றி வாழ்



1. அதிகாலையில் எழுபவன்..

2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்..

3.  முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்...

4. மண்பானைச் சமையலை உண்பவன்..

5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்...

6.  உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்...

7. வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்...

8. கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்....

9. மலச்சிக்கல் இல்லாதவன்...

10. நீரை  கொதிக்கவைத்து குடிப்பவன்...

11. துரித உணவுக்கு அடிமையாகதவன்...

12. படுத்தவுடன் தூங்குகிறவன்...

13. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்...

14. இயற்க்கை விவசாயம் செய்து வாழ்பவன்...

15. வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்....

16. உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்....

17. பத்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்....

18. ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல் செக்கு எண்ணையை உபயோகிப்பவன்...

19. அயோடின் உப்பை உண்ணாமல் கடல் கல்லுப்பை பயன்படுத்தவன்....

20. வெள்ளை சர்கரைக்கு பதிலாக கருப்பட்டி பனைவெல்லம் உபயோகிப்பவன்...

21. மரபணு மாற்றப்படாத காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுபவன்...

22. ஜங்க் உணவுகளை உண்ணாதவன்...

23. புகை, மது, மாது போன்றவற்றை விரும்பாதவன்...

24. உடல் உழைக்காமல் உண்ணாதவன்...

25. தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகளை உபயோகிக்காதவன்...

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் நோயின்றி வாழ்வான்....!!!!

#டெங்குகாய்ச்சலைவிரட்டும்_நாட்டுமருந்து..!

 #தேனுடன்_பப்பாளி இலை சாறு அதிசயம் போல வேலை செய்கிறது.  12 மணி நேரத்திற்குள் பிளேட்லெட் எண்ணிக்கை 68,000 லிருந்து 2,00,000 ஆக அதிகரிப்பதனை #ரத்தபரிசோதனையின் மூலம் எளிதாக அறியலாம்..

1.காய்ச்சல் இருப்பவருக்கு காலை மாலை இருவேளைக்கும் 20mlகொடுக்கலாம்....

2.காய்ச்சல் முழுமையாக குறையும் வரை குடிக்க வேண்டும் ....இருவேளையும் உணவுக்கு முன்பு அருந்துதல் நலம்...

3.பப்பாளி இலை சாறுடன் தேனை கலந்து ஜூடிப்பதால் ரத்தத்தில் உள்ள ரத்த செல்களை செறிவூட்டவும், ரத்த அணுக்களை அதிகரிக்கவும் செய்கிறது....

4. காய்ச்சல் இல்லாதவர்களும் வாரம் ஒருமுறை குடிப்பதால் ரத்தத்தில் உள்ள செல்கள் புத்துயிர் பெற ஏதுவாகும்..பக்க விளைவுகளற்றது...செலவில்லாதது...

முள்ளங்கியின் மருத்துவ பயன்

✍ இயற்கை வாழ்வியல் முறை
🌿🌿🌿🌿🌿🌿 முள்ளங்கியின் மருத்துவ பயன்
🌿🌿🌿🌿🌿🌿

முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.
🌿🌿🌿🌿🌿🌿
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
🌿🌿🌿🌿🌿🌿
வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

 🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
🌿🌿🌿🌿🌿🌿
பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.

🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
🌿🌿🌿🌿🌿🌿
சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
 🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
🌿🌿🌿🌿🌿🌿
இந்த முள்ளங்கியால் வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.

🌿🌿🌿🌿🌿🌿
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
🌿🌿🌿🌿🌿🌿
இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி
ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது.   முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
🌿🌿🌿🌿🌿🌿
  முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து குடிப்பது என்பது முடியாத ஒன்று. ஆகவே அந்த முள்ளங்கி ஜூஸை, கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸ் உடன் கலந்து குடியுங்கள்
🌷🌷🌷🌷🌷🌷
🌿🌿🌿🌿🌿🌿
உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

பித்தமே பிரதானம்.. பித்தமே சர்வ சக்தியும் !!!

பித்தமே பிரதானம்.. பித்தமே சர்வ சக்தியும் !!!

பித்தம் அடங்கினால் பேசாமல் போ என்பது சித்தர் வாக்கு..

பித்தம் அதாவது உஷ்ணம் ஆக்கவும் செய்யும் அதே சமயம் அழிக்கவும் செய்யும் !!!

நாம் நமது தாய் தந்தை பாட்டன் பூட்டன் பிறந்து  வாழ்ந்த  இடத்தில் இருந்து வேறு தொலைதூர இடத்திற்கு குடிபெயர்ந்து
போனால் நம் சரிரத்தில் பித்தம் அதிகரிக்கிறது.

 அந்த காலத்தில் பெண்களை வெகு தூரத்தில் எல்லாம் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள் !!!

பித்தமே உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதது.

அதே பித்தம் தான் நோய்வர காரணமாக அமைகிறது.

அளவுக்கு மிறினால் அது அமுதானாலும் நஞ்சு தானே..

நாம் என்பது இந்த பஞ்சபூதமான கலவையினால் ஆன உடல்.

இந்த பஞ்சபூத சக்தியான உடம்பை இயக்குவது இந்த உயிர்.

உடல் உஷ்ணம் அதிகரிக்க பித்தம் பிரதானம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் நம் வம்சாவளி முதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் நம் உடம்பும் உயிரும் பரிச்சியம் ஆயிருக்கும்.

அந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நமது மரபணுவும் பரிச்சியம் ஆயிருக்கும்.

அந்த சூழலில் இருந்து நாம் வெகு தூரத்திற்கு சென்று வாழ்வோமேயானால் உடல் அணுக்களின் செயல்பாடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிளது.

அந்த ஆதிர்வானது உடல் இயக்கத்தை பாதித்து ஒவ்வொரு உறுப்புகளும் அதன் செயல்ப்பாட்டை துரிதமாக்க முற்படுகிறது ஆனால் புதிதான சூழலுக்கு  உடன்பட நமது மரபணு அனுமதிக்காது.

ஆனாலும் நமது உறுப்புக்கள் சமன் செய்ய முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறது.

( நம் உடலில் உள்ள மரபணு நமது முதாதையரின் உண்ட உணவு அவர்கள் சந்தித்த நோய் அதை குணப்படுத்திய விதம் உடல் வாகு சிந்தனை எல்லாமே நமது மரபணுவில் பயனித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த ஆரோக்கியமான மரபணுவை நமது உடலில் பிரவேசிக்க விடாமல் தடுப்பதற்காக தீட்டிய வெகுநாள் திட்டம் தான் மரபணுமாற்றிய உணவு பொருள்கள் !!!

 அதனால் குழந்தையின்மை அதன் முலமாக நமது மரபணுவை அழிக்க செயற்கை கருவூட்டல் திட்டம்.

செயற்கை கருவூட்டல் மூலம் நமது முதாதையரின் மரபணுவை நமது உடலுக்குள் பிரவேசிக்கமல் தடுப்பது அதன் முலம் நோய்யை கொண்டுவந்து அந்த நோய்யை வைத்து வியாபாரம் செய்வது தான் மனித குல விரோதிகளின் திட்டம்

 (இலுமினாட்டி திட்டம்)

இதனால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது.

அதன் விளைவாக பித்தம் கூடுகிறது.

இதுவே உடலின் நோய் உருவாக ஏதுவாகிறது.

மனிதர்களை 7 வகையாக பிரிக்கலாம்

1. வாததோஷம் மட்டும் தனித்திருப்பது.

 2. பித்த தோஷம் மட்டும் தனித்திருப்பது.

3. கபம் மட்டும் தனித்திருப்பது என தனியே இருக்கும்

3 வகை.

 4. வாத பித்தம்
 5. பித்த கபம்.
6. வாத கபம் என இரட்டை தோஷங்களின் ஆதிக்கமுடைய 3 வகை.

 7. 3 தோஷங்களும் அதிகமிருந்து ஆதிக்கம் செலுத்தும் அரிதான ஒருவகை என்பன அவை.

இதனை ஒருவரின் பிரகிருதி என்பர்.

பித்ததோஷமே, செரிமானத்துக்கும், உருமாற்றத்துக்கும் காரணமாகிறது.

இது ஆரோக்கியத்துக்கு மிகவும் அடிப்படையான, தேவையான செயல். இது சரிவர நடந்தால் உடல்நலம் சரியாக இருக்கும்.

உடலின் வனப்புக்கும், பிரகாசத்திற்கும் காரணமாகிறது.

 பார்வை, பசி, தாகம், ஞாபகசக்தி, புத்தி கூர்மை, புலன் உறுப்புகளின் செயல்திறன் உடலின் மென்மை மற்றும் சக்தி ஆகியவற்றுக்கு காரணமாகிறது.

 சுரப்பிகளின்
செயல்பாடுகளுக்கு காரணமாகிறது.

நம் உள் உறுப்புகள் சிறுகுடல், பெறுங்குடல்,இதயம், இருதயஉறை,
நுரையீரல், கல்லீரல், பித்தப்பை, இரப்பை, மண்ணீரல், சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை, மூவெப்ப மண்டலம்
ஆகிய 12 இராஜ உருப்புக்களுக்கும் பித்தமே பிரதானம்.

 குறைந்தால் உடல் சமாளித்துக்கொள்ளும்
( குறைவதற்கு வாய்பு மிக குறைவு ).

நமது உடல் என்றைக்காவது 95 டிகிரி பாரன்கீட் சென்றதை கண்டது உண்டா நீங்கள்..???) ஆனால் அதிகமானால் உடலே ஆட்டம் கண்டுவிடும்.

ஆகவே தான் நான் சொல்கிறேன் பித்தமே பிரதானம்..

பித்தமே சர்வ சக்தியும்..ஆக்க சக்தியும் அதுவே அழிவு

 (இங்கு அழிவு என்பது நோய்யை குறிக்கிறது) சக்தியும் அதுவே..

இதில் இனைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். சிறுகுடல் பெருங்குடல் கபம் தான் என்றாலும் அதை இயக்கும் சக்தி பித்தமே.

 அதனால் தான் நாம் முன்னோர்கள் குளித்ததும் சாப்பிட கூடாது என்றனர் !!!

 குளித்ததும் வயிறு குளிர்ந்து இருக்கும்.

 அப்போது உஷ்ணம் (பித்தம்) இல்லாமல்  சிறு குடலால் ஜீரணம் செய்ய முடியாது.

ஆதலால் தான் குளித்து முடித்து அரைமணி நேரம் கழித்து உணவு அருந்த சொன்னார்கள் நம் முன்னோர்கள் !!!

 குளித்ததும் உணவு அருந்தினோமேயானால் அந்த ரசாயணம்    கலந்த உணவுக்கு உஷ்ணம் ஜீரணிக்க போதுமானதாக கிடைக்கும் வரை அதிக நேரம் சிறுகுடலில் இருக்க நேரிடும் அதனால் சிறுகுடல் உட்சுவர்கள் பாதிப்படைய நேரிடும் !!!

நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி எடுத்துக்கொள்வதின் சூட்சமமும் இதுவே !!!

சித்தர் காலத்தில் சோதிக்கப்பட்ட மருந்து எல்லாமே பித்தத்தை பிரதானமாக கொண்டு தான்.

அகத்தியர் பாடலை ஆராய்ந்து பார்த்தால்  உங்களுக்கே புலப்படும்.

 தீர்க்க முடியாத நோய்க்கு உங்கள் விதி பயனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று பெயர் சூட்டிவிட்டார்கள்.

அதே பித்தத்தை பிரதானமாக கொண்டு இப்போது உள்ள மானிடர்களுக்கு 
சிகிச்சை அளித்தால் மருந்து வேலை
செய்வதில்லை

மாறாக மருந்து நீர்த்து போகிறது அல்லது  தேகத்தின் பித்தத்தால்(நெருப்பு) கொடுக்கப்படும்
மருந்து எரிந்து போகிறது என்று ஆனித்தரமாக சொல்லலாம்.

குறிப்பு

பிறந்து ஒரு வருடம் வரையில் குழந்தையை வெளியில் விசேசதிற்கோ இல்லை வேறு ஏதாவது பண்டிகைக்கோ எடுத்து சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் குழந்தை அழ ஆரம்பிக்கும் உடனே குழந்தை வயிற்றில் சுத்தமான விளக்கெண்ணெய் தேய்த்தால் அந்த குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

எப்படி உஷ்ணம் அதிகரித்தது என்பது இப்போது புரிகிறதா...???

பெரியோர்கள் சொல்வார்கள் குழந்தைக்கு பலரது கண் பட்டிருக்கும் என்று.....

கண் என்பது உஷ்ணம் வெளிப்படும் ஒர் இடம் !!!

 அந்த பார்வையில் இருந்து வந்த உஷ்ணம் ( பித்தம்) தாக்கி இருக்கும் என்பது பொருள்..

மாதவிடாய் உள்ள நாட்களில் பெண்கள் உடல் இயல்புக்கு மாறாக உஷ்ணம் அதிகரித்து காணப்படும்.

ஆகவே சில தெய்வீக மூலிகைகளை தொடக்கூடாது என்பார்கள் !!!

 ( மருகு,தொழுதன்னி etc..).

இன்றைய அதிநவின வளர்ச்சி அடைந்த உலகம் என்று சொன்னாலும்.

எந்த நவின இயந்திரத்தை கொண்டும் நமது மரபணுவை ஆராய்வது அதன் செயல் திறனை பரிச்சித்து பார்பது என்பது இயலாத காரியமே..

முதலில் இயந்திரம் என்றால் என்ன..??? நம் அறிவை வைத்து கண்டுப்பித்தது தானே அந்த அதிநவின இயந்திரம்..???

 என்னத்தான் அதிநவின இயந்திரம் ( auto intelligent machine or robo) ஆனாலும் நாம் எந்தமாதிரி கட்டளைக்களையை கட்டமைத்து அந்த இயந்திரத்திற்கு சக்தி கொடுத்தோமோ அதற்கு ஏற்றவார்தானே எதிர் வினை கொடுக்கும்..

 அந்த இயந்திரத்தை கொண்டு பஞ்சபூத சக்தியை ஆராய்வது என்பது இயலாத காரியம் !!!

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.இதை விட எளிதாக என் எண்ணத்திற்கு சிந்தனைக்கும் சொல்வடிவம் கெடுப்பது கடினம்.

அடுத்த பதிவில் பற்பம் செந்தூரம் கொண்டு செய்யும் மருந்தை பற்றி பார்ப்போம். வெறும் கடுகு அல்லது அரிசி எடையே  அளவே கொடுத்து குணமாக்கும் மருந்து அது.

அது வரையில் எனது எல்லா பதிவையும் படித்து தெளிவு பெறுங்கள்.. நன்றி

தகவல் இறை அருள் வைத்தியர் மாலிக்
8220320197

நன்றி சிரவண குமா

மனிதகுலத்தினை_காப்போம்..!!!

"தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்,
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான். "

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் இதிலுள்ள உண்மை என்னவெனில்...

#தென்னையை_விதைப்பவன், அது குறுகிய காலத்தில் வளர்ந்து குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் சிரட்டை, கீற்று, பிஞ்சு, நார் மற்றும் தென்னம்பாளை, தென்னங்கல், கொப்பரை, எண்ணெய், மரசாமான்கள் என பல பொருட்களின் நன்மைகளை கொண்ட உணவுப் பொருட்களைத் தின்று அனுபவித்துவிட்டு வயதாகி சாவான் என்பதே உண்மை....

 #பனையை_விதைப்பவனோ,  முதலில் விளைவிக்கும் தலைமுறை பனையின் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதே உண்மை...மேலும் அது வளர பல ஆண்டுகள் ஆகும் எனவே பார்த்துவிட்டு சாவான் என்பது கிராமத்து பழமொழி...

பனையை விதைத்தவரின் அடுத்த சந்ததியருக்கு பனைக்குருத்து, பனையோலை, நுங்கு, பதநீர், பனம்பழம், பணங்கூழ், பனைஎண்ணை,பங்கல்கண்டு, பனஞ்சர்க்கரை, கருப்பட்டி மற்றும் மரசாமான்கள் என பல நற்பலன்களை அள்ளித்தருவதோடு நாட்டு மருத்ததுவத்திற்கு பெரும்பங்கினை அளிக்கவல்லது என்பதே உண்மை...

இப்பழமொழியின் உண்மையரியாமல்...

தென்னை விதைப்பவன் தேங்காயை உண்பதினால் அதிக கொழுப்பு சேர்ந்து நோய்கள் பீடித்து இறந்துபோவான் என்பதும் வதந்தியே...

பனையை விதைப்பவன் மரம் வளருவதனை பார்த்துக்கொண்டே இறப்பான் என்பதும் வதந்தியே...

#குறிப்பு:

இரண்டு மரங்களுமே மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் #வரங்கள்..!!!!

ஆதலினால் பயந்தரக்கூடிய இதனை போன்ற மரங்களை அதிகளவில் நடுவோம்!!!

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

அதற்க்கு முன்னால், பாதிப்பு இல்லாததன் காரணம் என்னவெனக் கூறுகிறேன்.  "வெண்பூசணி" மோர்குழம்புதான் அது.

°°செய்முறை:-

##வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்,  பிறகு  தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னசீரகம்  சேர்த்து அரைக்கவும், பிறகு வழக்கம்போல் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை , பெருங்காயம் சேர்த்துத் தாலித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தனியும்.

இயற்கை மருத்துவம் :-

இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.