சளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்!
சளித்தொல்லை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் விட்டு வைப்பது இல்லை.
உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும்.
ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம்.
இத்தகைய சளித் தொல்லையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போம்.
பூண்டு
சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.
2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.
தேங்காய் எண்ணெய்
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்பு மீதும், முதுகுபுறமும் தடவினால் சளி, இருமல் குறையும்.
முள்ளங்கி
சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது.
ஏலக்காய் பொடி
1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும். மேலும் வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும்.
வெங்காயம் மற்றும் தேன்
சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.
ஆவி பிடித்தல்
தீராத சளியினால் அவதிப்படுபவர்கள் ஆவி பிடித்தல் சளி இளகி, வெளியேற ஆரம்பித்து, மூக்கடைப்பில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி டீ
சளியை உடலில் இருந்து உடனடியாக வெளியேற்ற இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்ற பானங்களை குடிக்கலாம்.
சுடுநீரில் உப்பு
சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைத்தால் மூக்கடைப்பு நீங்கும்.
ஹனி அமானிய்யா இயற்கை சித்த மருத்துவர் .க. அலாவுதீன். தூத்துக்குடி மாவட்டம்
8056924288_*