ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !
-------------------------------------------------------------------
இந்நாட்டில் ஒரு வேளை சோற்றிற்கு கஷ்டப்படுபவர்களே இன்னமும் அதிகம் 🍛
வேளா வேளைக்கு சோற்றை உள்ளே தள்ளுபவர்கள் மருத்துவமனை வாசலில் நிற்கிறார்களா 🤒 இல்லை ஒரு வேளை சோற்றிற்கு கஷ்டப்படும் சாமானியர்கள் நிற்கிறார்களா என்பதை சிந்தித்தாலே உண்மை புரிந்துவிடும் 🤔
உணவு, தன்னை தின்னும் அளவிற்கு, அதை தின்கிறான் மனிதன் !
உடலின் உள்ளே சோறு போகாமல் இருந்தால் 🍛 உடலை விட்டு நோய் ஓடிப்போகும் 🏃🏽♂
என்ன பார்க்கறீங்க 👀 உண்மை தானுங்க 😍 வாங்க எப்படினு பார்ப்போம் 😊🌷
இரண்டு குறளுடன் துவங்குவோம்.
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.
நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.
இது தான் அந்த மூன்று சக்தி
1 - செரிமான சக்தி
2 - இயக்க சக்தி
3 - நோய் எதிர்ப்பு சக்தி
இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.
காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.
மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.
உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும் !
இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.
உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.
உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருந்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.
உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?
--------------------------------------------------------------------
1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.
2 - சமய முறைப்படி இருக்கலாம்.
3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.
இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.
பேதி மருந்து சாப்பிட்டு மூன்று மாதத்திற்கு மேல் ஆனவர்கள்
பேதி மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் (கர்ப்பிணிகள் எடுக்க வேண்டாம்)
மருந்து கிடைக்கவில்லை எனில் சுடு நீரில் விளக்கெண்ணை கலந்து குடிக்கலாம் அல்லது முருங்கை இலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கலாம். இனிமா கேன் வைத்திருப்பவர்கள் இனிமா எடுக்கலாம். அன்று மோர் சாதம், கஞ்சி, அவல், பழங்கள் போன்ற எளிய உணவை மட்டுமே எடுக்க வேண்டும். அசைவம் தொடக்கூடாது.
பின் பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள் 🥛 பசி அடங்கிவிடும்.
இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது 😏 குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள் 😋
திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம் 🍊 வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம்.
வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை, சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.
எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.
உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
நோன்பின் போது என்ன நடக்கலாம் ?
----------------------------------------------------------------
ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.
1 - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்
2 - மலம் கருப்பாக வெளியேறலாம்
3 - சளி வெளியேறலாம்
4 - உடல் ஓய்வு கேட்கலாம்
5 - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)
6 - வலிகளை உணரலாம்
என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?
--------------------------------------------------------------------
1 - அதிக உடல் எடை சீராகும்
2 - முகம் பொழிவு பெறும்
3 - கண்ணில் ஒளி வீசும்
4 - சுறுசுறுப்பு அதிகரிக்கும்
5 - இரத்தம் தூய்மை பெறும்
6 - தோலின் நிறம் சீராகும்
7 - மன உளைச்சல் குறையும்
8 - கவலை, பயம், கோபம் குறையும்
9 - புத்துணர்வு கிடைக்கும்
10 - உடல் பலம் பெறும்
11 - மன அமைதி பெறும்
12 - ஆழ்ந்த தூக்கம் வரும்
ஆக மொத்தத்தில்
உடலில் ஆரோக்கியமும் !
எண்ணத்தில் அழகும் !
மனதில் நிம்மதியும் !
கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.
Tuesday, 22 January 2019
நுரையீரலில் உருவாகும் கோழை - கரிசலாங்கண்ணி
சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள்.
````~`` #கரிசலாங்கண்ணி 🌱🍃 🌱
ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.
உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.
#சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.
இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.ஷ🌱🍃
இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் #வேண்டுமானாலும்_செய்யலாம்.
#கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.
அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.
இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.
இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.🌺🌸
#குறிப்பாக_யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்..!

சித்த மருத்துவத்தில் உயர்பயன்பாடு கொண்ட கருப்பட்டியின் பயன்கள்
சித்த மருத்துவத்தில் உயர்பயன்பாடு கொண்ட கருப்பட்டியின் பயன்கள்
கண்டிப்பாக சர்க்கரை நோயாளிகள் பனங்கருப்பட்டி சாப்பிடலாம். சர்க்கரையை தீயில் போட்டால் தீயை அதிகரிக்கும். அதேசமயம் பனங்கருப்பட்டி தீயில் போட்டால் தீயை அணைக்கும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன்,
கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்
தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்…
உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய்
எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.
மேலும் விவரங்களுக்கு
https://goo.gl/posts/QspVN
பனை உணவுள் தயாரிக்கும் காணொளியை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://youtu.be/IK-31GAeRYo
இயற்கையான முறையில் தயாரித்த கலப்படமில்லாத பனை உணவுப் பொருட்கள்
பனங்கருப்பட்டி
பனை வெல்லம்
பனைசக்கரை
சில்லுகருப்பட்டி
சுக்கு கருப்பட்டி
பனம்பழம் ஜுஸ்
பனங்கிழங்கு மாவு
பனங்கற்கண்டு

Saturday, 8 December 2018
Subscribe to:
Posts (Atom)