Tuesday, 22 January 2019

நுரையீரலில் உருவாகும் கோழை - கரிசலாங்கண்ணி

சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள்.
````~`` #கரிசலாங்கண்ணி 🌱🍃 🌱
ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.
உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.

#சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.

இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.ஷ🌱🍃

இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் #வேண்டுமானாலும்_செய்யலாம்.

#கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.
அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.
இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.🌺🌸

#குறிப்பாக_யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்..!