Wednesday, 20 February 2019

வலியை குறைக்கும் இயற்கை உணவுகள்:

வலியை குறைக்கும் இயற்கை உணவுகள்:

வெங்காய சாறையும் கடுகு எண்ணெய்யையும் கலந்து முட்டியில் தேய்த்து வந்தால் மூட்டுவலி குணமாகும்

மோர் சாதத்தில் சிறிது சுக்குப்பொடி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட மூட்டு வலி குறையும்

வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து வற்றலாக ஆனபின் சாப்பிட்டு வந்தால் வாத நோய், வாயு நோய் நீங்கும் கை கால்களில் பிடிப்பு, மூட்டு வலி நீங்கும், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

சுடுதண்ணீர் அரை டம்ளர் அதில் கொஞ்சம் உப்பு சிறிது மஞ்சள் தூள் அரை எலுமிச்ச பழச்சாறு கலந்து லேசான சூட்டில் குடித்து வந்தால் சூதக வயிற்று வலி குறைந்துவிடும்

வெற்றிலையின் மீது விளக்கெண்ணெய் தடவி வயிற்றின் மீது போட்டு விட்டால் வெயிலால் வரும் உஷ்ண வயிற்று வலி குறையும்

மூல நோய் உள்ளவர்கள் வலி தோன்றும் போது பசும்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து சாப்பிட்டால் வலி குறையும் பப்பாளி பழத்தை துண்டு துண்டாக நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்

பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு அந்த சமயங்களில் எலுமிச்சம் பழச்சாறை நீரில் கலந்து குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

காலையில் ஆப்பிள் ஜுஸ் குடித்தால் தீராத வயிற்று வலி தீர்ந்துவிடும் ரத்த விருத்தியும் உண்டாகும்

வெள்ளைப் பூண்டின் சாற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்துவிட தலை வலி மறையும்

தீராத தலைவலி இருந்தால் சிறிது சீரகம், ஒரு லவங்கம் 2 மிளகு இதை அரைத்து பசும்பாலில் கரைத்து நெற்றியில் பூசிக் கொண்டால் தலை வலி போய்விடும்

சுக்கு, இஞ்சி, மிளகு, சமஅளவு கலந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடல் வலி உடனே குறையும்.