Wednesday, 20 February 2019

வலியை குறைக்கும் இயற்கை உணவுகள்:

வலியை குறைக்கும் இயற்கை உணவுகள்:

வெங்காய சாறையும் கடுகு எண்ணெய்யையும் கலந்து முட்டியில் தேய்த்து வந்தால் மூட்டுவலி குணமாகும்

மோர் சாதத்தில் சிறிது சுக்குப்பொடி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட மூட்டு வலி குறையும்

வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து வற்றலாக ஆனபின் சாப்பிட்டு வந்தால் வாத நோய், வாயு நோய் நீங்கும் கை கால்களில் பிடிப்பு, மூட்டு வலி நீங்கும், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

சுடுதண்ணீர் அரை டம்ளர் அதில் கொஞ்சம் உப்பு சிறிது மஞ்சள் தூள் அரை எலுமிச்ச பழச்சாறு கலந்து லேசான சூட்டில் குடித்து வந்தால் சூதக வயிற்று வலி குறைந்துவிடும்

வெற்றிலையின் மீது விளக்கெண்ணெய் தடவி வயிற்றின் மீது போட்டு விட்டால் வெயிலால் வரும் உஷ்ண வயிற்று வலி குறையும்

மூல நோய் உள்ளவர்கள் வலி தோன்றும் போது பசும்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து சாப்பிட்டால் வலி குறையும் பப்பாளி பழத்தை துண்டு துண்டாக நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்

பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு அந்த சமயங்களில் எலுமிச்சம் பழச்சாறை நீரில் கலந்து குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

காலையில் ஆப்பிள் ஜுஸ் குடித்தால் தீராத வயிற்று வலி தீர்ந்துவிடும் ரத்த விருத்தியும் உண்டாகும்

வெள்ளைப் பூண்டின் சாற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்துவிட தலை வலி மறையும்

தீராத தலைவலி இருந்தால் சிறிது சீரகம், ஒரு லவங்கம் 2 மிளகு இதை அரைத்து பசும்பாலில் கரைத்து நெற்றியில் பூசிக் கொண்டால் தலை வலி போய்விடும்

சுக்கு, இஞ்சி, மிளகு, சமஅளவு கலந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடல் வலி உடனே குறையும்.

உடல் - கேட்கும் மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....!

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.டேட்டா இல்லை கமியா டேட்டா இருக்குனுட்டு பகிராமல் இருந்துவிடாதீர்கள்.

நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன மருத்துவம்.

சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.

1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *

காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

குறிப்பு:
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

4 மாதங்களில் கொழுப்பு

கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

4 மாதங்களில் ஆஸ்துமா

குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குளிர் நீர் 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!

1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து 25 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
🌷4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
🌷நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
🌷விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
🌷இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
🌷இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???
🌷அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!
🌷அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...

அதலைக்காய்(புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்)

#புற்றுநோயிலிருந்து
#எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்! அதிர்ஷ்டம் இருந்தால் உடனே வாங்கி விடவும்!

நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான்.

இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.

ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது #அதலைக்காய் என்னும் அற்புத மருந்து.

#அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது.

இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும்.

இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.

அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம்.

சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை.

#சர்க்கரை_நோய்

இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் இயற்கை கொடுத்த வரமாகும்.

#புற்றுநோய்

இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. முக்கியமாக இது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது.

#சிறுநீரக_செயல்பாடு

சிறுநீரக பாதிப்பு என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது. ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தால் இந்த அதலைக்காயை சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கறையத்தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவும்.

#எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்த உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்வதே. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இதன் மூலம் ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கம் குறையும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்த படுகிறது.

#எடை_குறைப்பு

முன்பே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும்.

அதுமட்டுமின்றி இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.

#பிரச்சினை

அதலைக்காயில் உள்ள ஒரே பிரச்சினை இதை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். எனவே இதனை வெளியூர்களில் பார்ப்பது மிகவும் கடினம். ஒருவேளை உங்கள் அதிர்ஷடம் இந்த அதலைக்காயை பார்க்க நேர்ந்தால் உடனடியாக வாங்கிவிடவும்.

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் ஓமத் தண்ணீர்...!!

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் ஓமத் தண்ணீர்...!!

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன்  கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி  அருந்திவருவது நல்லது.

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று மற்றும் நீரால், சுவாசம், இருமல் போன்ற நோய்கள்  ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம் - 250 கிராம், ஆடாதோடைச் சாறு - 135 கிராம், இஞ்சி ரசம் - 135 கிராம், பழரசம் - 130 கிராம், புதினாசாறு - 130 கிராம், இந்துப்பு - 34 கிராம், சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து  வந்தால் இருமல், சுவாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.

ஓமத் தண்ணீர் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத்  திராவகம்தான். குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமத் தண்ணீர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு  நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.  காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.

வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. சுறுசுறுப்பின்றி  சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.

இயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கலாம்

இயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கலாம்🌐⛔



கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.


எலி


எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.


பல்லி


உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.





சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.


கொசுக்கள்


கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.  எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.


கரப்பான் பூச்சி


கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.


மூட்டைப்பூச்சி


மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்     
மார்பு சளியை இரண்டே நாட்களில் இரண்டே ரூபாயில் குனப்படுத்தும் முறை..

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்..!!!

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்..!!!

• உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

• சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.

• தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்

• தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் இளமையான சருமம் கிடைக்கும்.

• ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

• விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.