Saturday, 8 December 2018

முடி உதிர்வை கண்டு இனி கவலைப்பட வேண்டாம்..!!

முடி உதிர்வை கண்டு இனி கவலைப்பட வேண்டாம்..!!
தமிழர்களின் கைமருந்து நெல்லிச்சாறு !!
👉இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100க்கும் அதிகமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் மனிதன் உடல்பருமன், சிறுவயதிலே கண் குறைப்பாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என பல நோய்களை விலைகொடுத்து வாங்கிவிடுகிறான். இன்று ஒருவர் 100 வயதை கடந்துவிட்டால் பிரம்மிப்பிற்குரிய விஷயமாக உள்ளது. காரணம், நாம் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மறந்துவிட்டோம்.

👉இந்த நிலையை முழுமையாக மாற்ற நாம் மறந்து போன, மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களையும், உணவுகளையும் மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று 'நெல்லிக்காய்".


👆👆👆
நெல்லிக்காய் :

👉தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர். உடல்நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகை உண்டு. பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி போன்றவை உண்டு. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும். நெல்லிக்காயை சாறாக உண்ணும்போது திரவ வடிவில் உள் செல்வதால் இன்னும் வேகமாக உடலில் சேருகிறது.

நெல்லிச்சாற்றின் பயன்கள் :

👉நெல்லிச்சாற்றை தினமும் குடிப்பதனால் செல்கள் புத்துணர்வு பெரும். சுருக்கங்கள் இல்லாமல் தோல் பொலிவு பெறும்.

👉இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும். மேலும், ரத்தம் உறைந்து போவதை தடுக்கும்.

👉சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தும்.

👉வைட்டமின் ஏ அதிகம் இருப்பதனால் கண் குறைபாடுகளை குணப்படுத்தும்.

👉கால்சியமும், பொட்டாசியமும் எலும்புகளை வலுவடைய செய்யும். பல் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும்.

👉முடி கொட்டுதல், இளநரை, பொடுகு போன்ற தலை சம்பந்தமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும். நெல்லிச்சாறு மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்துகிறது.

👉பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிச்சாறு ஒரு சிறந்த மருந்தாகிறது.

👉வயிற்று கோளாறுகளுக்கு, புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.

👉ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கிறது. எனவே, புற்றுநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

👉கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் ஏற்றது. முக்கியமாக மகப்பேறு காலங்களில் உதவுகிறது