Saturday, 8 December 2018

Food Digestion









Fruits











Body Parts





முழங்கால் வலி

 "முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
           
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                   
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது. 
                 
                 இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல்  அணைவரும் உபயோகித்து பயன்   அடைந்தால்  நான் மிகவும் மகிழ்வேன்.
                         Dr.M.C.Ramamurthy,
                            9150001551.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

முடி உதிர்வை கண்டு இனி கவலைப்பட வேண்டாம்..!!

முடி உதிர்வை கண்டு இனி கவலைப்பட வேண்டாம்..!!
தமிழர்களின் கைமருந்து நெல்லிச்சாறு !!
👉இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100க்கும் அதிகமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் மனிதன் உடல்பருமன், சிறுவயதிலே கண் குறைப்பாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என பல நோய்களை விலைகொடுத்து வாங்கிவிடுகிறான். இன்று ஒருவர் 100 வயதை கடந்துவிட்டால் பிரம்மிப்பிற்குரிய விஷயமாக உள்ளது. காரணம், நாம் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மறந்துவிட்டோம்.

👉இந்த நிலையை முழுமையாக மாற்ற நாம் மறந்து போன, மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களையும், உணவுகளையும் மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று 'நெல்லிக்காய்".


👆👆👆
நெல்லிக்காய் :

👉தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர். உடல்நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகை உண்டு. பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி போன்றவை உண்டு. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும். நெல்லிக்காயை சாறாக உண்ணும்போது திரவ வடிவில் உள் செல்வதால் இன்னும் வேகமாக உடலில் சேருகிறது.

நெல்லிச்சாற்றின் பயன்கள் :

👉நெல்லிச்சாற்றை தினமும் குடிப்பதனால் செல்கள் புத்துணர்வு பெரும். சுருக்கங்கள் இல்லாமல் தோல் பொலிவு பெறும்.

👉இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும். மேலும், ரத்தம் உறைந்து போவதை தடுக்கும்.

👉சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தும்.

👉வைட்டமின் ஏ அதிகம் இருப்பதனால் கண் குறைபாடுகளை குணப்படுத்தும்.

👉கால்சியமும், பொட்டாசியமும் எலும்புகளை வலுவடைய செய்யும். பல் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும்.

👉முடி கொட்டுதல், இளநரை, பொடுகு போன்ற தலை சம்பந்தமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும். நெல்லிச்சாறு மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்துகிறது.

👉பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிச்சாறு ஒரு சிறந்த மருந்தாகிறது.

👉வயிற்று கோளாறுகளுக்கு, புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.

👉ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கிறது. எனவே, புற்றுநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

👉கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் ஏற்றது. முக்கியமாக மகப்பேறு காலங்களில் உதவுகிறது

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள ஒருவருக்காவது குளிர் ஜுரம் வந்துவிடும். காரணம் குளிர்காலத்தில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்தி நம் உடலில் இல்லையென்றால் உடனே நோய்த்தாக்குதல் உண்டாகும்.

நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலை நம் உடலுக்குத் தருவது ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வலியேற்ற எதிர்பொருள்தான். வைட்டமின் சி, வைட்டமின் இ, செலீனியம், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துப்பொருள்களை உள்ளடக்கியதே ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ்.

இந்த சத்துக்கள் அடங்கிய உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் நம் உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

 இனி இந்தச் சத்துப் பொருட்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன என பார்ப்போமா

வைட்டமின் சி
------------------------
சிட்ரஸ் பழங்கள் என அழைக்கப்படும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அடுத்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள், முளைக்கட்டிய பயறு, பச்சை மற்றும் சிவப்பு மிளகு இவற்றிலும் வைட்டமின் சி உள்ளது.
வைட்டமின் இ
சூரியகாந்தி விதை, சோயா பீன்ஸ் இவற்றில் வைட்டமின் இ அதிகம் உள்ளது.

செலீனியம்
--------------------
நம் உடலுக்குத் தேவைப்படும் தனிம சத்து இது. மீன், இறைச்சி இவற்றில் செலீனியம் உள்ளது. தானியங்களிலும் செலீனியம் உள்ளது. மண்ணுக்கு அடியில் அதிக காலம் உள்ள கிழங்கு வகைகளிலும் செலீனியம் உள்ளது.

பீட்டா கரோட்டீன்
----------------------------

நிறமிக்க காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் கொட்டிக்கிடக்கிறது. உதாரணத்துக்கு பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, மாம்பழம், ஆப்ரிகாட் இவற்றில் அதிகம் உள்ளது.

இந்தச் சத்துள்ள உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொண்டால் உடலின் எதிர்ச்சக்தி பெருகி, குளிர்கால நோய்கள் நம்மைத்தாக்காமல் இருக்கும் குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?🔰

நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன..

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக
மாறி விடும்....மேலும் நாம்
ஓய்விலிருந்தால் ...இயங்கு
சக்தியின் அளவான 32%...நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண
காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த
செயல்முறையின்போது (Process)
நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில்
நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்
சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /
கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகள்
மற்றும் கிருமிகளை
வெளியேற்றும் வேலையில்
ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose)
ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis
(Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக்
கருதி
அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம்
என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற
முடியாதபோது நமது உடல்
சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும். இந்த
சளியையும்
நாம் வியாதி எனக் கருதி
மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம். அந்த
மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப்
(Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம்
தடைபடும்.

இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்துகொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு
பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது"
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை
மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும்
கழிவுகளை நம் உடம்பானது
எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி
அதை தடுக்க முயற்சிக்கும்போ
ததான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது
உடலால் கட்டியாக்கப்படும். பிறகு
நமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம்
வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில்
தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு
கழிவுகளை வெளியேற்ற
முயற்சிக்கும்போது அந்த இடத்தில்
வலி ஏற்படும். சிலநேரம் நமது
எதிர்ப்பு சக்தி போதுமான அளவில்
இல்லையென்றால் நமது உடலின்
இயக்க சக்தி
தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி
ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும்
செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான்
தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால்
மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma
அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்ற
தொந்தரவுகள்
ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக
இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை
கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

குறிப்பு 1 :

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு 3 ;

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

குறிப்பு-4 :

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

குறிப்பு- 5 :

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு- 6 :

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

குறிப்பு- 7 :

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

உணவுச் சிந்தனை முத்துக்கள்...

உணவுச் சிந்தனை முத்துக்கள்...

1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும்.

2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும்.

3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி

4). பளபள மேனிக்கு பப்பாளி

5). வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி.

6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும்  குமரி, நெல்லி.

7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால்

8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள்

9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால்

10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ

11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை

12). சமைத்த உணவு தவறான உணவு

13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும்.

14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும்.

15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும்.

16). பசிக்காத உணவு குப்பை உணவே.

17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே.

18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே

19). வசம்பு நமது மூலிகைத்தாய் -  கடுக்காய் நமது இரண்டாவது தாய்.

20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும்.

21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது.

22). அசையாத பருமன் உடலும் நெல்லியால் நடக்கும் - ஆப்பிளால் ஆடும் - பப்பாளியால் ஓடும்.

23). தக்காளியால் குண்டு அன்பர்கள் கட்டழகு பெறலாம்.

24). பாலும் சமைத்த கீரையும் நஞ்சு - தேனும் நெய்யும் சம அளவு நஞ்சு.

25). தேனும் முட்டையும் நஞ்சு - தேனும் சீனியும் சம அளவு நஞ்சு.

26). முள்ளங்கியும் உளுந்தும் நஞ்சு - மீனும் பாலும் நஞ்சு

27). மணத்தக்காளியும் மிளகும் நஞ்சு - தயிரும் வெங்கலப் பாத்திரமும் நஞ்சு

28). தொப்பைக்கு எதிரி தக்காளி, தர்பூசணி.

29). வயிற்றின் நட்புணவுகள் வெள்ளரியும் வெந்தயமும்.

30). முதுகு தண்டுக்கு முருங்கை, பப்பாளி.

31). அமிர்த உணவுகள் தேங்காய், மாதுளை.

32). நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, வெந்தயம் உண்பவர்கள் தனக்குத்தானே மருத்துவர்.

33). வாரம் ஒருநாள் இயற்கைச்சாறுகள், மாதம் இரண்டு நாட்கள் நோன்பு - உங்கள் ஆயுளை பத்து வருடம் நீடிக்கும்.

34). அளவுக்கு மீறினால் உணவே நஞ்சு.

35). தினசரி ஒரு பிடி கரிசாலை நரை திரை மாறும்

36). தோல் வியாதிகளுக்கு நண்பன் கத்தரிக்காய்.

37). இரத்த விருத்திக்கு செம்பருத்தி - மூட்டுவலிக்கு முடக்கற்றான்.

38). குடற்புழுக்களுக்கு வேப்பங்கொழுந்து - சளிக்கு கற்பூரவல்லி.

39). கொழும்புக்கு எதிரி வெங்காயம், இஞ்சி, பூண்டு.

40). இரத்த அழுத்தத்திற்கு மிளகு, வெந்தயம்.

41). கல்லடைப்புக்கு வாழைத்தண்டு - வரட்டு இருமலுக்கு உலர்ந்த திராட்சை.

42). நினைவாற்றலுக்கு வல்லாரை - சித்தம் தெளிவிற்கு மஹா வில்வம்

43). மூளைக்கு வாழைப்பழம், வல்லாரை, பேரீட்சை, உலர் திராட்சை மற்றும் வெண்டைக்காய்.

44). பைத்தியம் தெளிய வெண்பூசணி, பேய்ச்சுரக்காய்

45). வெட்டுக்காயத்திற்கு வசம்பு, தேன்.

46). புற்றுநோயை தடுக்கும் மஞ்சள், வெண்பூசணி, சீத்தாப்பழம், கோதுமைப்புல் சாறு

47). மூலநோய்க்கு அத்திக்காய், கருணைக்கிழங்கு

48). தலைப்பேனுக்கு மலைவேம்பு - உடல் காய்ச்சலுக்கு நிலவேம்பு.

49). தாய்ப்பால் பெருக பூண்டு, வெந்தயம், முருங்கை

50). சொரி, சிரங்குக்கு வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி.

51). குஷ்ட நோய்க்கு வேப்பம்பிசின் - புற்றுநோய்க்கு வேப்பிலை.

52). வயிற்று புண்ணுக்கு மணத்தக்காளி - பல்வலிக்கு பப்பாளி

53). சுகப்பிரசவத்திற்கு குங்குமப்பூ, தேன், பிரண்டை

54). சர்க்கரை ரோய்க்கு பாகற்காய்- சிறுநீரகத்துக்கு சிறுகீரை

55). சிற்றின்பத்துக்கு சிறுபசலை - தாது விருத்திக்கு முருங்கை

56). குடற்புழுக்களுக்கு பாகற்காய், வேப்பிலை, சுண்டைக்காய், கடுக்காய்.

57). பித்த வெடிப்புக்கு வேப்பெண்ணெய் + மஞ்சள், விளக்கெண்ணெய் + சுண்ணாம்பு

58). நெஞ்சு சளிக்கு சுண்டைக்காய் - நரைமுடிக்கு தாமரைப்பூ

59). வயிற்று கடுப்புக்கு கேழ்வரகு மாவு + சர்க்கரை

60). உடல் அசதிக்கு கோதுமை மாவுக் கஞ்சி

61). பிள்ளை பெற்றவளுக்கு அரைகீரை - உட்புண்களுக்கு கடுக்காய்

62). வாய்ப்புண்ணுக்கு கொய்யா இலை - வயிற்றுப்புண்ணுக்கு மணத்தக்காளி இலை

63). திக்குவாய்க்கு வில்வம் - நாக்குப் புண்ணுக்கு பப்பாளிப்பால்

64). குதிகால் வலிக்கு  எருக்கு - இரத்த விருத்திக்கு அருகு

65). சளிக்கு துளசி - பித்தத்திற்கு வில்வம்

66). மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி - நரம்புகளுக்கு வல்லாரை

67). புரையோடிய புண்ணுக்கு அத்திப்பால், கருவேலங் கொழுந்து

68). அகத்தின் தீயை அணைக்கும் அகத்தி

69). சர்க்கரை நோய்க்கு ஆவாரம்பூ, பாகற்காய்

70). விஷப் பூச்சி, ஜந்துக்களின் விஷமுறிவுக்கு சிறியாநங்கை