Saturday, 20 October 2018

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

உடலும் மனமும் திடமாக இருப்பதே உண்மையான அழகு. நம் முன்னோர்கள், ஒரு தாய் கருவுற்றிருக்கும் போதே சிசுவிற்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். வியப்பில் ஆழ்த்தும் எண்ணற்ற அஞ்சறைப் பெட்டிப் பொருள்களை நாட்டு வைத்தியமாகக் கடைபிடித்திருக்கின்றனர். அதிலும் பெண் குழந்தைகள் என்று கருதினால் அழகிற்கும் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னெச்சரிக்கையாக கை வைத்தியங்கள் செய்திருக்கின்றனர். பெண் தாய்மையடைந்த நேரத்தில் மருந்து கொடுப்பது தொடங்கி, சாத்திரங்கள், சடங்குகள் எனப் பல்வேறு முறைகளாக வைத்திருந்தனர். அவற்றை மூடநம்பிக்கைகள் எனப் புறக்கணித்தாலும் அதற்குள் இருக்கும் மருத்துவ உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.

குழந்தை பிறந்த சில நாள்களில் காய்ந்து விழுந்த தொப்புள் கொடியைத் தாயத்தில் வைத்து கழுத்தில் அணிவித்திருக்கிறார்கள். ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான காலகட்டத்தில் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்று உலக அளவில் நடக்கின்றன. இதை நம் மூத்தகுடிகள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
இன்றைக்கும் கிராமங்களில் கடுக்காய், வசம்பு இவற்றைக் கொண்ட காப்பினை கைகளில் அணிகின்றனர். செரிமானக் கோளாறு, சுறுசுறுப்பின்மையால் மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு உரைத்து பாலாடையில் கொடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நாம் மறந்துபோன ஒரு மரப்பாச்சி பொம்மை. மருத்துவக் குணம் கொண்ட சந்தனம், செம்மரம், ஈட்டி மரத்தினால் செய்யப்படுவது. குழந்தைகள் கடித்து விளையாடினாலும் தோல்களில் பட்டாலும் சந்தனத்தின் தன்மையால் தோல் அழற்சி, சிறு சிறு வேனல் கட்டிகள் நீங்கும் எனக் கூறுகின்றனர். உடல் சூட்டைத் தணிக்க காப்பரினால் ஆன காப்பு அணிவதும், இயற்கையாக வீட்டிலேயே செய்த கண்மையினை விளக்கெண்ணெய் கலந்து கண்கள், கன்னங்கள், பாதங்களில் இட்டிருக்கின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக பச்சைப்பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர்  கலந்த நலங்கு மாவு வீட்டிலேயே தயார் செய்யப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் முறையற்ற துரித உணவுகளாலும், பரபரப்பான வாழ்க்கை சூழல் மற்றும் மனஉளைச்சலாலும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் பெருகிவிட்டன. குறிப்பாக நீர்க்கட்டிகள் (PCOS). இதனால் முகம் முழுவதும் பருக்களும், கருப்புத் திட்டுகளும் உருவாகின்றன. மீசை போல முடிகள் அதிகம் வளர்வதும் நிகழ்கிறது. இன்று எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் வந்து விட்டன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எண்ணப்பாட்டிற்காக மட்டும் சொல்லிச் செல்லவில்லை. உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் தீங்கினை வெளிக்காட்டும் முதல் அறிகுறியாக செயல்படுவது தோல்.  அடிப்படை சிகிச்சை பெறாமல் இறக்குமதி செய்யப்பட்ட பவுடர்களால் மறைத்து அழகாக காட்டிக் கொள்வது ஆபத்தானது.  இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மிஷா பெப்சி விரிவாகப் பேசுகிறார்.

நவீன உலகில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவைகளை எதிர்த்துப் போராடுவதிலேயே தங்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இயற்கையான காய்கறிகள், பழங்கள், தானியவகைகள் இவற்றோடு உடற்பயிற்சியும்  உடல் சுத்தமும் பேணிக்காத்தால் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம். பொதுவாகவே பெண்கள் பூப்படைந்தபின் மாதவிலக்கில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரும்புச் சத்து மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உதிரப்போக்குகள் ஏற்படக்கூடும். அதற்கு வெல்லம், பேரீச்சம்பழம், மாதுளம்பழம்  போன்றவற்றை உண்ண வேண்டும். ஆட்டு ஈரல் போன்ற இறைச்சி வகைகளும் நலம் பயக்கும்.

சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ, முகத்தில் அழுக்கு சேர்ந்தாலோ ஹார்மோன்  சுரப்பிகள் சரியான அளவில் சுரக்காமல் இருந்தாலோ முகத்தில் நிறைய பருக்கள் வர வாய்ப்புள்ளன. வெள்ளைப்படுதல், புற்றுநோய், நோய்த்தொற்று, உடல்பருமன், வயிற்று வலி, முடிகொட்டுதல் எனப் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஒருபுறம், பெரும் வளர்ச்சி கண்ட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் புதிது புதிகாக நோய்கள் உருவாகின்றன. மறுபுறம், அதற்கான தடுப்புமுறை ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. நோய் வராமல் காப்பதும், நோய் வந்தபின் தகுந்த சிகிச்சை மூலம் உடலைப் பேணிக்காப்பதுமே சிறந்தது எனக் கூறினார்.

சமீபத்திய நோய்களின் பெருக்கம் அச்சமாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு பெண் பூப்படைந்தால், கருமுட்டை வளர்ச்சிக்கும், இடுப்பு எலும்பின் வலுவுக்கும் நல்லது என வீட்டுப் பெரியவர்கள் முளைக் கீரை விதைகளை உண்ணக் கொடுத்தனர், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் நாட்டுக் கோழி முட்டை கலந்தும், தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் நல்லெண்ணெய் குழைத்தும் கழி செய்து கொடுத்தனர்.

பூப்பு நீராட்டுவிழாவாக கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் விழா எடுக்கப்பட்டது. வளைகாப்பிற்கான ஏழு வகை சோறும், சடங்கு நாள் அன்றைக்கான பருப்பு சோறும், தாய்மாமன் வீட்டு புட்டும் செய்வதற்கான பொருட்களெல்லாம் இன்றும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன.அதன் மகத்துவம் அறியாமல் நாம்தான் அலுப்புடன் அலட்சியப்படுத்துகிறோம். சிந்தித்துப் பார்த்தால், பாரம்பரியம் நிறைந்த நம் மண்பானை வாழ்வியலில், அளப்பரிய பெரும் மருத்துவ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நாகரிகம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தொலைத்து, ரசாயனங்களுக்கு அடிமையாகிவிட்டோம்.

இப்போதொன்றும் காலம் கடந்து விடவில்லை. எழுதப்படாத நம் மூதாதையரின் அறிவியல் அறிவை, பெண்களாகிய நாம் நடைமுறையில் மீட்டெடுக்க மீள் முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கிய வாழ்க்கையை சாத்தியப்படுத்த வேண்டும்.

"டாக்டர்கள் தேவையில்லை"

"டாக்டர்கள் தேவையில்லை"

சீராக பராமரிக்கக்கூடிய உடலைக் கொண்டே சிறந்த ஆரோக்கியம் பெற முடியும். அதன் மூலம் தான் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இது தானே புத்திசாலித்தனம்..!!

கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகளை உண்டு, நம் அருமையான உடலை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறது மனிதஇனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்

1. ஆரோக்கிய உணவு

நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவு (Balanced Diet) எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தமம்.

2. உடற்பயிற்சிக் கூடம்

வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள் பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கியுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce or Burn Extra Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒரு வேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது மடமையே. தசைகள் வலு விழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can lead to muscle loss).

3. எலும்புகளுக்கு கால்சியம்

அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப் பிடிப்பு உண்டாகும்.

4. நிறைய தண்ணீர்

உங்களின் எடையை சீராக வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

5. ஆழ்ந்த உறக்கம்

தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு மூல காரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்.

இவற்றை முறையாக கடைபிடித்தால் பெரும் மருத்துவமனைகளை வாழவைக்க வேண்டிய அவசியமில்லை. விதவிதமான மருந்துகளும், மருந்துகளின் பல்வேறு பக்கவிளைவுகளும் உங்களை தேடி வராது. நம்மை மருந்துகளால் சோதனைக்கு உட்படுத்தப்படும் மனித உடல்களாய் மட்டுமே பார்க்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஆரோக்யம் என்பது அனைத்து விதத்திலும் நம் கைகளில்....

Useful Video for generation

























இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!


• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horse gram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள்,

லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள், எப்படி மக்களை நடைப்பிணங்களாக மாற்றுகிறார்கள் என்பதை தோலுரித்துள்ளார் டாக்டர் ஜான் ரென்ஜென். 

Pharmaceutical companies that target children -

https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html



https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html

சிறுநீரக_பாதுகாப்பு

சிறுநீரக_பாதுகாப்பு
********
சிறுநீரக பாதிப்பு 90 % இல்லாத மாநிலம் எது?

அதன் காரணம் என்ன?

இந்த வெண்பூசணி மோர்குழம்புதான் அது.

செய்முறை:-

கும்பளங்காய் என்று மலையாலத்திலும், கூஷ்பாண்டம் என்று சம்ஸ்கிரதித்திலும் அழகாக அழைக்கப்படும் வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்;
பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னஜீரகம் சேர்த்து அரைக்கவும். பிறகு வழக்கம்போல் எண்ணெய் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்துத் தாளித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப்பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தணியும்.

கேரளத்தில் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90% சதவிகிதம் இல்லை.!

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.



புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்  உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக  பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து  இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து  கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது  எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ....

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை  அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு செடி

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!

12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்!



எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு… என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும்.

முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி… அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு.

இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம்.

அதனால்தான் ‘ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

விஷக்கடிக்கு மருந்து!

இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து… புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம். தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும்.

குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.

ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!

எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். இதன் பால்… பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.

கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இதுதான் பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த எருக்கின் வேர்களில் பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடுவார்கள். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து.

வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும். ’10கிராம் இஞ்சி,

3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல...!

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல...!
இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே நமது நோக்கம்.

இது மருத்துவத்தின் ஒரு வியாபார தந்திரம் மட்டுமே...?

மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது.

இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்போம்.
நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசியை வெளியேற்றி விடுகிறது.

அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.

தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது. இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்
.
.
இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மையைப் பொறுத்தும், அவை தேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது.

# நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது.

# அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது.

# நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது.

இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.

நோய்க்குக் காரணம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால் நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே. இது எவ்வாறு சாத்தியமாகும்?
இதுவொரு நியாயமான சந்தேகம்.

எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான். ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

 அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல, பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர்.

# டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.

# ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

 டிப்தீரியா என்பது தொண்டையைப் பாதித்து, அதன்பின் உயிரையே குடிக்கும் ஒரு கொடிய நோய். இந்த நோயில் காணப்படும் கிருமிகளை ஹிண்டர் தனிமைப்படுத்தி வளர்த்தார். இலட்சக்கணக்கான இந்தக் கிருமி நீர், பால், உணவு ஆகியவற்றில் கலந்து ஆரோக்கியமான பலருக்கு உண்ணக் கொடுத்து வந்தார்.

 ஆனால் ஒருவர்கூட டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படவில்லை.
அவர் செய்த மற்றொரு ஆராய்ச்சி இன்னும் புதுமையானது. இதே கிருமிகளைச் சிலருடைய உள்நாக்கு, தொண்டை மற்றும் மூக்கின் உட்பாகம் ஆகியவற்றில் நேராகவே தடவி விட்டார். இப்போதும் எவரும் நோயால் பாதிக்கப்பட வில்லை.

 நுண்கிருமிகளே நோய்க்கான காரணமென்றால் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர்.

இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார்.

மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.

இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்குவது என்ன?

நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவதில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை.

 ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலுவிழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள்.

 எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும்.

இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உடலில் மேலும் ரசாய கழிவுகள் தேங்குகின்றன. இதனால் மற்றும் ஒரு புதிய முறையில் உடல் [உயிர்-ஜீவசக்தி] அந்த கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது.

 இப்போது உடலில் முன்பைவிட சற்று கூடுதலான தொந்தரவு தோன்றுகிறது. இப்போதும் பல டெஸ்ட்கள் எடுத்து பார்த்துவிட்டு இதற்கும் ஒரு கிருமிதான் காரணம் ஆனால் அதற்கு வேறு ஒரு புதிய பெயர் என்று மருத்துவம் இன்று பல புதிய நோய்களை உருவாக்கி வருவது வேதனையான விஷயம்.

“ஒரு நோயை குணபடுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாகிவிடாதீர்கள்” என்பது ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர்.ஹிப்போக்ரேட்டிஸ் மருத்துவர்களுக்கு கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் ஆங்கில மருத்துவமோ தங்களை அறியாமலேயே பெரும் தவறிழைத்து கொண்டிருகிறது.
நாம் நம் உடலின் அடிப்படையை புரிந்துகொள்ளாதவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இதற்கு எடுத்துகாட்டு, இன்று டிவி ஐ போட்டாலே சாதாரண பேஸ்ட் முதல்கொண்டு சீப்பு, சோப்பு, பவுடர், ஷாம்பூ, மற்றும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்க கூட இந்த கிருமிகள் மிகவும் பேருதவியாக உள்ளது. இவர்களுக்கு முதலீடே பணம் அல்ல கிருமிகள் தான்.

 இன்று சாதாரண பொருட்களை விற்க கூட மருத்துவரின் வெள்ளை கோட்டு இல்லாமல் ஒரு விளம்பரமும் வருவதில்லை.
என்று நாம் கிருமிகள் என்பது வெறும் கட்டுக்கதை என்பதனை புரிந்துகொள்கின
்றோமோ அன்றுதான் நமது உடல் தன்னை தானே குணப்படுத்தும் என்பதில் நம்பிக்கை வரும்.

 அப்போது தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அன்று நம்மால் சும்மா இருக்க முடியாது. மற்றவர்களுக்கும் இதனை புரியவைக்க முயற்சிப்போம். அதை தான் நான் செய்துகொண்டுள்ளேன்.

 புரிந்தால் நீங்களும் நிச்சயம் இதைதான் செய்வீர்கள்.
இவை மற்றும் அல்ல, சில வருடங்கள் முன்பு வரை மருத்துவர்கள் உபயோகித்த Syringe மற்றும் ஊசிகள் சுடும் நீரில் போட்டு எடுத்து மீண்டும் உபயோகிக்கும் முறையை கடைபிடித்தார்கள் அப்போது எந்த நோயும் பரவியதாக தெரியவில்லை. இன்று Disposable Syringes தான் பயன்படுத்தபடுகிறது இதனை மாற்ற இவர்கள் கூறியது ஊசிகள் மூலம் நோய் பரவும் என்று.. ஆனால் இன்றோ அப்படி நோய் பரவாது என்றும் இதே மருத்துவம்தான் கூறுகிறது.

 இதற்கு இடையில் ஒரு வியாபாரம் நடந்து உள்ளது. பலருக்கும் ஒரே Syringe மற்றும் ஊசிகள் பயன்படுத்துவதால் லாபம் வருமா அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயன்படுத்தினால் லாபம் வருமா...? இந்த வியாபாரத்தில் கூட்டு சேர்ந்த வெளிநாட்டு மருந்து கம்பெனி Dispovan, இவர்கள்தான் இன்று அதிக அளவில் Disposable Syringes தயாரிக்கும் கம்பெனி. மருத்துவம் எப்படி வியாபாரமாக மாறிவருகிறது பாருங்கள்.

இதற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு, சில வருடங்கள் முன்பு வரை ஷேவ் செய்ய உபயோகித்து வந்த Blades இன்று எப்படி மாறி உள்ளது என்று பாருங்கள். நமக்கே தெரியும் சில வருடங்கள் முன்பு வரை ஒரு கத்தி மட்டுமே இருக்கும், அதனை சிறிய கல்லை கொண்டு தீட்டி அதில்தான் அனைவருக்கும் ஷேவ் செய்வார்கள். அப்போது நோய்கள் எவ்வளவு இருந்தது என்றும் இன்றோ அவை எப்படி பெருத்து உள்ளது என்றும் உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் இன்றோ நாம் உபயோகிக்கும் Single Use Razors தான் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இது வர காரணமாக சொல்லப்பட்டதும் இதே கிருமிகள் தான். ஆனால் இன்று மருத்துவம் சொல்கிறது Blade கள் மூலம் எல்லாம் கிருமிகள் பரவாது என்று. ஆனால் இன்னும் நம் பயம் மாறவில்லை. இடையில் லாபம் அடைந்ததும் ஒரு வெளிநாட்டு கம்பெனி தான் அது இந்தியாவில் இருந்த அனைத்து கம்பெனிகளையும் ஒழித்துவிட்டு இன்று முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் Gillette.

இவற்றை எல்லாம் பார்த்தால் எந்த ஒரு வெளிநாட்டு பொருளையும் இந்தியாவில் விற்க மருத்துவத்துறை மிக பெரிய பக்கபலமாக இருப்பது கண்கூடாக நிரூபிக்கபடுகிறது. இது போல் மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் பல உள்ளன அவற்றை எல்லாம் மக்கள் கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதே என் கடமை.

 உடலின் எந்த உறுப்பில் கழிவுகள் தேங்குகிறதோ அங்கே கிருமிகள் தோன்றி அந்த கழிவை உணவாகக்கொள்ளும். இந்த கிருமிகளைத்தான் ஆங்கில மருத்துவம் ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு குறிப்பிட்ட கிருமி காரணமாக இருக்கிறது என்று ஒவ்வொரு கிருமியையும் அழிக்க ஒவ்வொருவிதமான மருந்துகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன.

சில சமயங்களில் அந்த மருந்துக்கு நோய் கட்டுப்படுவதில்லை என்று வேரொரு மருந்தை கண்டுபிடித்து சிபாரிசு செய்கிறது. இப்படியே எந்த கிருமியையும் அழிக்க முடியாமல், ஏராளமான கழிவுகளை மருந்து சாப்பிட்டதின் மூலம் ஏற்படுத்தி கிருமிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கைங்கரியத்தைதான் செய்கிறார்கள் என்பது நோயாளிகளுக்கும், ஏன் மருத்துவர்களுக்கும் தெரியாது.
ஆங்கில மருத்துவம் நோய்களுக்கு மருத்துவம் பார்க்காமல் நோய் குறிகளுக்கு மருத்துவம் பார்க்கிறது! உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை இயற்கை சரியாக செய்கிறது.

அதைக் கெடுப்பதுமில்லாமல் உடம்பையும் கெடுத்து, கழிவையும் உள்ளேயே தேங்க வைக்கிறார்கள்!
கழிவுகளை கிருமிகளை தின்று தீர்த்த பின்னும் நோய் குணமாகவில்லை என்றால் கழிவுகளை ஏற்படுத்தும் உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம் என்று அர்த்தம்.

கழிவுகள் உடலில் இருந்தால் அங்கு கிருமி இருக்கும். கழிவுகள் உடலில் தேங்கவில்லை என்றால் கிருமிகள் உடலைத் தாக்குவதில்லை.

ஆக முடிந்தவரை பிடித்தமான இயற்கை உணவுகளை பசிக்கும்போது ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். இங்கே ஏன் பசித்து சாப்பிட வேண்டும் என்று கூறுகிறோம் என்றால், பசிக்காகமல் சாப்பிடும் உணவு முறையாக ஜீரணம் ஆகாமல் மேலும் கழிவுகளை உடலில் சேர்க்கும். ஆக முறையற்ற உணவும், முறையற்ற ஜீரணமும் கழிவுகளை ஏற்படுத்தி கிருமிகளுக்கு விருந்து வைக்காமல் பார்த்துக்கொண்டால் உடலுக்கு எந்த நோயும் எளிதில் வராது.

நோய் அணுகா விதிமுறைகள்:

# முதலில் பால் கலந்த டீ மற்றும் காப்பி, மது, பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் ஆங்கில மருந்துக்களை உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இவை ஜீரண உறுப்புக்களை கடுமையாக பாதிக்கும். இதனாலும் முறையற்ற ஜீரணம் ஏற்பட்டு கழிவுகள் உடலில் தேங்கும் என்பதை கவனத்தில் கொண்டு அத்தகைய பழக்கங்களையும் கைவிட வேண்டும்.

# இரவு சீக்கிரமாக தூங்க வேண்டும். தூங்கும் இடம் இயற்கை காற்றோட்டதுடன் இருக்க வேண்டும். ஜன்னலை பூட்டிய அறைகளில் தூங்கக்கூடாது. கொசு விரடிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

# தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்களை உட்கொள்ளுதல் கூடாது.

இது போன்ற நோய் அணுகா விதிமுறைகளை கடைபிடித்தால் எந்த நோயிலிருந்தும் எளிதில் விடுபடலாம்.

உணவே மருந்து; வாழ்க்கைமுறையே தீர்வு!

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது. சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையின
ால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே நமது நோக்கம்.

மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய சில அடிப்படை முதலுதவிகள்


மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய சில அடிப்படை முதலுதவிகள்:-

மாரடைப்பு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? வாருங்கள் பார்ப்போம்...


நெஞ்சினைக் கசக்கிப்பிழிவது போல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல் அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல் அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல். உடனே வாந்தி வருதல். அதன் காரணமாக ஏற்படும் படபடப்பு. அத்துடன் காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகிய இவையே மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். இதனைக் கொண்டு வந்திருப்பது மாரடைப்பா என்பதை நாம் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

வந்திருப்பது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திய பின்னர் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை:-

ஆபத்தில் இருப்பவரை பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும்.

பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கின்றாரா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் செவி அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும். நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டிச் செல்லவும்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள். இப்படியாக செயற்கை சுவாசம் தாருங்கள். இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதனைக் குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.

அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

புற்று நோய்

இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.

மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.
 நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.

சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.

அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.

இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,

அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
                                                                     – அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்

இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.

நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.

அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,

நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.

அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.

இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.

இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார்.

நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்
உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.
அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,
இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.

அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.

2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார்.

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.

ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.

மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.

இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.

நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.

வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!

 இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்
Dr. S. Devadoss
SIVA SIDDHA clinic
Nadiyammankoil road
Pattukkottai 614601
Cell. 7667337444
          9788191044