செய்வதைச் சொல்வோம்.

செய்வதைச் சொல்வோம்.
*********
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
(அல்குர்ஆன் : 61:2)

كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
(அல்குர்ஆன் : 61:3)

இரண்டு விதமான சொற்சொடர்களை இந்த வசனம் தடுக்கின்றது.

1.தாம் செய்யாததை செய்ததாகக் கூறி பெருமையடித்துக் கொள்வது.

2. தாம் செய்யாமல் பிறரை செய்யும் படி தூண்டுவது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை எடுத்துச் சொல்வதை விட வாழ்ந்துக் காட்டுவதே மிக சிறந்த செயலாகவும் முன்மாதிரியாகவும் கருதப்படும்.

கீழ்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் வருகிறது.

இந்த உலகில் பிறருக்கு நன்மையை எடுத்துச் சொல்லி அழைத்தவர்கள், இவர்களின் அழைப்பை ஏற்று நன்மையின் பக்கம் திரும்பியவர்கள், தம்மை அழைத்த சிலர் நாளை மறுமையில் நரகில் கிடப்பதைப் பார்ப்பார்கள்.

அப்போது ‘நீங்கள் எங்களுக்கு நன்மையை ஏவினீர்களே இப்போது நரகில் கிடக்கின்றீர்களே..ஏன் என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் உங்களுக்குத் தான் நன்மையை ஏவினோம் அதை நாங்கள் செய்யவில்லை. தீமையை விட்டு நாம் உங்களைத் தடுத்தோம் ஆனால் அத்தீமையை நாங்கள் செய்தோம். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது”  என்று புலம்பி கதறுவார்கள் என்ற எச்சரிக்கையை முஹம்மத்(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதை நாம் மறக்காமல் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று காலை இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா ஜும்ஆ மஸ்ஜிதில் ஃபஜ்ருக்குப் பின் மேலுள்ள வசனத்திற்கு கொடுத்த தஃப்சீரில் சில....

சொல்லும் செயலும் ஒருபோல இருக்க அல்லாஹ் நமக்கு அருள்பாலிப்பானாக.

அல்லாஹும்ம ஆமீன்.